9,239 Views
இதன்போது குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், யுவதி உயிர்தப்பியுள்ளார்.
கோப்பாய் தெற்கு மாதா கோவிலடியை சேர்ந்த சிவபாதம் திணேஸ்குமார் (19 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.அதே பகுதியை சேர்ந்த 21 வயதுயுவதியொருவரை கடந்த ஒருவருடத்துக்கு மேலாக அவர் காதலித்து வந்துள்ளனர்.
இக் காதல் சம்பவம் இருவரது வீட்டாருக்கும் தெரிய வரவே இவர்களது காதலை பிரிப்பதற்கான நடவடிக்கைகள் இருதரப்பாலும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.
குறித்த இளைஞனை வெளிநாடொன்றுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் அவரது பெற்றோர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே நேற்றை மாலை 6 மணியளவில் குறித்த இருவரும் வீட்டை விட்டு புறப்பட்டு கோப்பாய் இராசபாதை வெள்ளவாய்க்கால் பகுதியில் உள்ள தோட்டங்களில் மறைந்திருந்துள்ளனர்.
சம்பவதினமான இன்று காலை 6 மணியளவில் இவர்கள் இருவரும் தோட்ட பகுதியில் இருந்த கிணற்றுக்கு அருகில் அமர்ந்துள்ளதை இவர்களது உறவினர் கண்டுள்ளனர்.
இதனையடுத்து குறித்த இருவரையும் அவர்கள் பிடிக்க முற்பட்ட போது காதல் ஜோடிகள் கிணற்றுக்குள் பாயந்து தற்கொலை செய்ய முற்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த யுவதி கிணற்றுக்குள் இருந்த நீர் இறைக்கும் குளாயை பற்றிப் பிடித்ததன் காரணமாக உயிர் தப்பிய அதேவேளை நீரில் முழ்கி இளைஞன் உயிரிழந்துள்ளான்.
இச் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.