புலி திரைப்படத்தை அடுத்து இளைய தளபதி விஜய், தற்போது அட்லி இயக்கி வரும் தெறி திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெறி திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா,எமி ஜாக்சன் ஆகிய முன்னணி கதாநாயகிகள் நடித்து வருகின்றனர்.
இந்த திரைப்படத்திற்கு G .V பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஜாக்ஸ் C .வில்லியம்ஸ் திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்து வருகிறார்
தெறி திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் இந்தியாவிலேயே எடுக்கப்பட்டன. கடந்த சில மாதங்களாக இழுபறியில் இருந்த தெறி படப்பிடிப்பு, தற்போது முடிவடைந்துள்ளதாக படத்தின் ஒளிப்பதிவாளரான ஜாக்ஸ் C.வில்லியம்ஸ் உறுதிப்படுத்தி உள்ளார்.
இதனையடுத்து இப்படத்திற்கான இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் ஈடுபடவுள்ளனர். இந்த நிலையில், தெறி திரைப்படத்தில் விஜய் பல கடினமான பயிற்ச்சிகளை மேற்கொண்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இப்படத்தில், 100 அடி உயரத்தில் இருந்து தண்ணீரில் குதிப்பது போன்ற ஒரு காட்சியினை,படமாக்க திட்டமிடப்பட்டிருந்தது. ''திரைப்பட காட்சி என்பது தத்ரூபமாக அமைய வேண்டும்'' எனக்கூறி விஜய் தானே தண்ணீரில் குதித்து நடித்திருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். திரைப்படத்தை சிறப்பாக வெளியிட வேண்டும்,என்ற விஜயின் இத்தகைய முயற்சி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.