கடல் படத்தின் மூலம் வாரிசு நடிகராக தமிழ் சினிமா என்ற பெருங்கடலுக்குள் கால் வைத்தவர் "நவரசநாயகன்" கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக். இவர் இப்போது நடிக்கும் படம் தான் "வை ராஜா வை". இதில் நாயகியாக ப்ரியா ஆனந்த் நடிக்க, டானியல் பாலாஜி,டாப்ஸி,மனோபாலா ஆகியோரும் சேர்ந்து நடிக்கிறார்கள்.
ஐஸ்வர்யா தனுஷ் இன் இயக்கத்தில் படத்திற்கான ஒளிப்பதிவை வேல்ராஜ் கவனிக்க, யுவன் சங்கர்ராஜாவின் இசையோடு உருவாகி வருகின்றது "வை ராஜா வை". இந்தப்படத்திற்கான ஒரு பாடலை தனுஷ் எழுதியுள்ளாராம். அந்தப்பாடலை தன் இசைவாரிசு யுவனிற்காக இசைஞானி இளையராஜா பாடிக்கொடுத்திருக்கிறாராம்.
இது இவ்வாறிருக்க, மனைவிக்காக தனுஷ் கூட இந்தப்படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த விஷயம் பற்றியும், தனுஷ் நடிக்க தான் இயக்கும் இந்தக் காட்சியை எடுக்கும்போது ஏற்படும் மனநிலை பற்றியும் ரசிகர்களுடன் ருவிட்டர் சமூக வலைத்தளத்தின் மூலம் சந்தோசமாக பகிர்ந்து கொண்டிருப்பதோடு, கணவர் தனுஷிற்கு நன்றியையும் சொல்லியிருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ்.
ஆடுவாராம் தனுஷ்... ஆடவைப்பாராம் ஐஸு.....
*கணேசமூர்த்தி ராகவன்.