இந்த வருட ஆரம்பத்திலேயே பொங்கல் களை கட்டியது.
பொங்கல் வெளியீடுகளான அஜித்தின் ‘வீரம்’ படமும், விஜய்யின் ‘ஜில்லா’ படமும் மோதிக் கொண்டன.
இரு படங்களுமே வசூலில் குறைவில்லாமல் ஓடியதால், ‘தல தளபதி’ கூட்டணி வரும் தீபாவளிக்கும் மோதவிருக்கின்றன.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ‘தீரன்’ எனப் பெயரிடப்பட்டிருப்பதாக சொல்லப்படும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன்முறையாக சமந்தா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை தீபவாளிக்கு வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.
அதேபோல் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படமும் தீபாவளிக்கே வெளியிடப் போவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்னும் படப்பிடிப்பு துவங்காத இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். இசையமைப்பாளர் யார் என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார் இயக்குனர் கௌதம்.
(ஹரிஸ் ஜெயராஜ் என்று சினிமாப் பட்சிகள் கூவுகின்றன)
இந்த இரண்டு படங்களும் தீபாவளிக்கு ரிலீஸாகுமானால் தியேட்டர்களில் சரவெடிதான் என ‘தல தளபதி’ ரசிகர்கள் சந்தோஷத்தில் மிதக்கின்றனர்.