ரொம்ப கஷ்டப்பட்டு படம் நடிச்சிட்டு, வெற்றி, புகழாரவாரங்களுக்கு மத்தியில் பிரபல ஹீரோக்களே அமைதியாக இருக்கும் போது. இந்த ரசிகர்கள் பண்ணுற கூத்திருக்கே அப்பப்பா தாங்கவே முடியாது. அதுவும் அஜித், விஜய் ரசிகர்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.
இவர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானால், ரசிகர்களின் அக்கப்போர் தாங்கவே முடியாது. ஆனால் இந்தநிலை இப்போது மாறியுள்ளது. சில மாதங்களாக ஒரு புதிய ட்ரெண்ட் உருவாகி வருகின்றது. விஜய் படங்களுக்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்து தெரிவிப்பதும். அஜித் படத்திற்கு விஜய் ரசிகர்கள் வாழ்த்தி போஸ்ட்டர் ஒட்டுவதும் தான் இப்போதைய டிரெண்ட். இது நல்ல விஷயம் தான் இப்படியே தொடரட்டும்.
விரைவில் வெளியாக காத்திருக்கும் தலயின்
'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இப்படத்திற்கும் விஜய் ரசிகர்கள் வாழ்த்தி போஸ்ட்டர் ஒட்டியிருக்கின்றார்கள், மதுரையில்.
இதில் 'தலயின் தரிசனத்திற்க்காக காத்திருக்கிறோம்' இப்படிக்கு எவனுக்கும் அடங்காத விஜய் வெறியர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். போஸ்ட்டர நீங்களே பாருங்க...

என்னை அறிந்தால் தீசர் -
இங்கே ர.பிரவீனா