உதவும் கரங்களின் உயர்ந்த உள்ளங்களோடு உச்சம் தொட்டது-சூரியனின் உதவும் கரங்கள்.இயற்கையின் கோரத்தாண்டவத்துக்கு இலக்காகி இன்னுயிரை இழந்து இயல்பற்ற நிலையில் இருக்கும் மலையகத்தின் கொஸ்லாந்தை மீரியபெத்தை மக்களின் மனங்களில் நம்பிக்கை நாற்றுக்களை விதைத்துவிட்டது சூரியனின்-உன்னத 'உதவும் கரங்கள்' திட்டம்.
'செய்வன திருந்தச் செய்,
செய்ய வேண்டிய நேரத்தில் செவ்வனே செய்,
யாரும் செய்ய முடியாததை செய் '
இது சூரியனின் சாதனை வெற்றிப் பயணத்தில் சரித்திர மகுடம் வாக்கியம் என்றாலும் மிகையில்லைபோலிருக்கிறது.
எல்லோராலும் செய்ய முடியாதவொன்றை எல்லோரும் செய்திடாத நேரத்தில் செய்து காட்டும் உங்கள் முதல்வன் சூரியன் இம்முறையும் அப்படியே ஓர் உன்னத பணியை செய்து காட்டி சரித்திர சாதனை படைத்திருக்கின்றது.
இயற்கையின் கோரதாண்டவத்துக்கு இலக்காகி இயல்பற்ற நிலையில் வாழ்விடம் இழந்து வாழத்துடிக்கும் மீரியபெத்தை இயற்கையின் மழலைகளுக்கு, கல்விக்கான காத்திரமான நம்பிக்கை உன்னத 'உதவும் கரங்கள்' மூலம் கொடுக்கபட்டிருப்பதில் சூரியன் வானொலி பெருமை கொள்கின்றது.
உதவும் கரங்களுக்கான அழைப்பு கிடைத்த நாள் முதலாய் தங்கள் உயரிய உள்ளங்கள் எத்தகையது என்பதை எங்கள் சூரிய சொந்தங்கள் மீண்டுமொருமுறை நிரூபித்துக்காட்டியிருக்கிறார்கள்.




வாழ்விடம் இழந்து வாழவழிதேடும் மீரியபெத்தை பகுதி மக்கள் தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய அங்கலாய்க்கும் இத்தருணத்தில் அவர்களுக்கு கல்விஎன்ற அந்த கூரான ஆயுதத்தை கையில்கொடுத்து எதிர்நீச்சல் போடவைப்பதே
அவர்கள் வாழ்வில் வனப்பைகொடுக்கும் என்பதை நன்குணர்ந்த ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு ரெய்னோ சில்வா அவர்களின் சீரிய சிந்தனையில் இந்த மீரியபெத்தை சிறார்களுக்கு உதவும் சூரியனின் 'உதவும் கரங்கள்' திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சூரியன் வானொலியின் பணிப்பாளர் A.R.V.லோஷன் அவர்களின் நேரடி வழிநடத்தலில் ,AHM அஸ்ரப் அவர்களின் தலைமையிலான திட்டமிடல் விரிவாக்கல் பிரிவு மற்றும் செய்திப் பிரிவினரின் கூட்டு முயற்சியின் பலனாகவே இந்த திட்டம் மிகப்பெரும் வெற்றியை தேடிதந்திருக்கின்றது.
இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட ,வளமான எதிர்காலத்துக்காய் காத்திருக்கும் பிஞ்சுகளின் நெஞ்சங்களில் பாலை வார்த்திருக்கிறது சூரியச் சொந்தங்கள் மலையாய் குவித்த கற்றல் உபகரணங்கள்.
அவர்களுக்கு தேவையான பெரும்தொகையான கற்றல் உபகரணங்களை வாரிவழங்கிய எங்கள் வள்ளல்கள் நினைத்ததை சூரியன் முன்னின்று நடத்திக் காட்டியிருக்கிறது.


இனிவரும் நாட்களில் உங்கள் பெயர் சொல்லி அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் தங்கள் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் காத்திருக்கிறார்கள் என்பதில் நம்பிக்கை கொள்வோம்.
அவர்கள் புரட்டுகின்ற ஒவ்வொரு தாள்களும் உங்கள் பெயர் சொல்லபோகின்றது. இந்த உன்னதமான கைங்கரியத்தொடு இணைந்து கரம்கொடுத்த எங்கள் சூரியச் சொந்தங்களுக்கு நாங்கள் தலைவணங்கி நன்றி நல்கின்றோம்.
நன்றி என்ற வார்த்தையை சொல்லி உங்களை நாங்கள் அன்னியப்படுத்திட நினைக்கவில்லை.
எது எங்கள் வெற்றியல்ல.
சூரியனின் உன்னத வெற்றிகளுக்கு என்றும் போல் உயிர் கொடுக்கும் உன்னத சூரிய சொந்தங்களே இது உங்கள் வெற்றி!
கல்லறைகளில் வாழும் மீரியபெத்தை உறவுகள் நிம்மதியாய் நித்திரை கொள்ளட்டும்.கண்ணீரில் வாடும் எங்கள் உறவுகளுக்கு நாங்கள் கரம் கொடுப்போம்!
உதவும் கரங்கள் திட்டத்தில் மிகப்பெரும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் சூரியன் வானொலியின் கோடான கோடி நன்றிகள்.
நன்றிகள் நல் உள்ளங்களே !






