உதவும் கரங்கள் -2014
மனமுவந்து நீங்கள் அள்ளி வழங்கிய பொருட்கள்
அத்தனையும் சரியாக நிறைவாக அத்தனை குழந்தைகளையும்
சென்று சேர்ந்த திருப்தி உங்களோடு சேர்த்து எங்களுக்கும்...
எங்கள் அழைப்புக்கு செவி சாய்த்து, முடிந்தவரைக்கும் முயன்று
தளராமல் தந்த உங்கள் உதவிப் பொருட்கள் மூலம்,
எதிர்பார்ப்போடு காத்திருந்த பிஞ்சுகளுக்கு எல்லாம் சென்று சேர்ந்தன..
உங்கள் உதவிகளால் முழுமை பெற்ற உதவும் கரங்கள் மூலம்
மீண்டும் நன்றிப் பூக்களை அள்ளித் தெளித்து ஆனந்திக்கிறோம்
எது எங்கள் வெற்றியல்ல.
சூரியனின் உன்னத வெற்றிகளுக்கு என்றும் போல் உயிர் கொடுக்கும் உன்னத சூரிய சொந்தங்களே இது உங்கள் வெற்றி!
உதவும் கரங்கள் திட்டத்தில் மிகப்பெரும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் சூரியன் வானொலியின் கோடான கோடி நன்றிகள்.
இயற்கையின் கோரத்தாண்டவத்துக்கு இலக்காகி இன்னுயிரை இழந்து இயல்பற்ற நிலையில் இருக்கும் மலையகத்தின் கொஸ்லாந்தை மீரியபெத்தை மக்களின் மனங்களில் நம்பிக்கை நாற்றுக்களை விதைத்துவிட்டது சூரியனின்-உன்னத 'உதவும் கரங்கள்' திட்டம்.
உதவும் கரங்களுக்கான அழைப்பு கிடைத்த நாள் முதலாய் தங்கள் உயரிய உள்ளங்கள் எத்தகையது என்பதை எங்கள் சூரிய சொந்தங்கள் மீண்டுமொருமுறை நிரூபித்துக்காட்டியிருக்கிறார்கள்.
சூரியன் வானொலியின் பணிப்பாளர் A.R.V.லோஷன் அவர்களின் நேரடி வழிநடத்தலில் ,AHM அஸ்ரப் அவர்களின் தலைமையிலான திட்டமிடல் விரிவாக்கல் பிரிவு மற்றும் செய்திப் பிரிவினரின் கூட்டு முயற்சியின் பலனாகவே இந்த திட்டம் மிகப்பெரும் வெற்றியை தேடிதந்திருக்கின்றது.
இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட ,வளமான எதிர்காலத்துக்காய் காத்திருக்கும் பிஞ்சுகளின் நெஞ்சங்களில் பாலை வார்த்திருக்கிறது சூரியச் சொந்தங்கள் மலையாய் குவித்த கற்றல் உபகரணங்கள்.
அவர்களுக்கு தேவையான பெரும்தொகையான கற்றல் உபகரணங்களை வாரிவழங்கிய எங்கள் வள்ளல்கள் நினைத்ததை சூரியன் முன்னின்று நடத்திக் காட்டியிருக்கிறது.
200 க்கும் அதிகமான பொதிகள் பொதி செய்யப்பட்டு பகிர்ந்து வழங்கப்பட்டன.ஒவ்வொன்றிலும் குறைந்தது இருபதாயிரத்துக்கும் அதிகமான கற்றல் உபகரணங்கள் சேர்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் மீண்டும் உயர்ந்த உள்ளம் கொண்ட எங்கள் சூரியச் சொந்தங்களுக்கு நன்றிகள் கோடி!
நன்றிகள் நல் உள்ளங்களே !


.jpg)
.jpg)














