1980களில் நாயகியாக கொடிகட்டிப் பறந்தவர் நடிகை ஜெயப்பிரதா.
நினைத்தாலே இனிக்கும், ஏழைஜாதி, சலங்கை ஒலி, தசாவதாரம் போன்ற பல படங்களில் வெற்றிக்கு துணை நின்றவர் இவர்.
இப்போது தனது மகான் சித்துவை ஹீரோவாக்கி ஹன்சிகாவை ஹீரோயினாக்கி ''உயிரே உயிரே'' படத்தை எடுத்து வருகிறார்.
இந்தப் படத்தில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், சித்து புதுமுகம், அத்தோடு படத்து ஏகப்பட்ட விளம்பரமும் இல்லை. படத்தை வாங்க விநியோகஸ்தர்களும் ஆர்வம் காட்டவில்லை. எனவே படத்தின் ட்ரைலரை ரஜினிக்கு போட்டு காண்பித்துள்ளார் ஜெயப்பிரதா.
இதற்க்கு ஒரு உள்நோக்கமும் உள்ளது!
இப்பொழுதுதான் கசிந்துள்ளது.
ரஜினிக்கு ட்ரைலரை போட்டுக் காண்பிக்க அவரும், சித்துவின் நடிப்பை பாராட்ட, அப்படியே நீங்களே இதில் ஒரு சின்ன காட்சியில் நடித்துக் கொடுத்தால் என்ன என்று, ஜெயப்பிரதா தன் நோக்கத்தை கொட்டியிருக்கிறார்.
இதுவரை சரியான பதில் சொல்லாத ரஜினி, எப்படியும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க ஆமோதிப்பார் என படக்குழு எதிர்பார்த்தது மட்டுமில்லாமல், ரஜினிக்குரிய கதையினையும் காட்சிகளையும் ரெடி பண்ண ஆரம்பித்துள்ளார்கள்.
''இதென்னடாப்பா? புதுசா திட்டம் போட்டு கிளம்பிருக்கானுங்க''னு ரஜினி தரப்பு புலம்பி வருகிறது.
#இதெல்லாம் சின்ன ட்ரிக்ஸ்தான்பா !!