இசையமைப்பு ஒரு பக்கமும் நடிப்பு இன்னொரு பக்கமுமாக, அழகாய் பயணம் செய்யும் ஜி.வி.பிரகாஷ் இப்பொழுது பல படங்களுக்கு இசையமைக்கிறார், அத்தோடு பல படங்களில் நாயகனாகவும் ஒப்பந்தமாகி வருகிறார்.
டார்லிங் படத்தில் நிக்கில் பராணி , பென்சிலில் ஸ்ரீ திவ்யா, அத்தோடு இப்பொழுது இன்னொரு படத்தில்
தெகிடி அழகு ஓவியம் ஜனனி ஐயரோடும் ஜோடி போட தயாராகிவிட்டார்.
பென்சில் மற்றும் டார்லிங் ஆகிய படங்கள் தயாரிப்பு பணியில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதனை முடித்த கையேடு, ஜனனியோடு இணைந்து ''த்ரிஷா இல்லைனன்னா நயன்தாரா'' எனும் இந்தப் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் ஜி.வி.பி!
தானே இசையமைத்து, தானே நாயகனாகவும் களத்தில் குதிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
மேலும், இணைந்து பணியாற்றவுள்ள கலைஞர்கள் பற்றிய முழுமையான அறிவிப்பு விரைவில் வெளியாகுமென சொல்லப்படுகிறது.
#யார் யாரோட இடமெல்லாம் பறிபோகப் போகுதோ?