இலங்கையைச் சேர்ந்த தமிழ் ரப், ஹிப் ஹொப் கலைஞரான ஆர்யன் தினேஷ் கனகரட்னம், பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
தன்னுடைய பாடல் வரிகளைத் தன் அனுமதியில்லாமல் புதிய பாடல் ஒன்றில் G.V.P பயன்படுத்தியதாகவே தினேஷின் குற்றச்சாட்டு உள்ளது.
நான் சிகப்பு மனிதன் திரைப்படத்தின் லவ்லி லேடீஸ் (Lovely Ladies) பாடலில் வரும் ரப் வரிகள், தன்னுடைய புதிய பாடலில் இருந்து பெறப்பட்டவை என்பதே தினேஷின் குற்றச்சாட்டு.
முன்னர் விஜய் அன்டனி போன்றோரின் படங்களில் பாடி, ரப் பாடல்கள் எழுதியுள்ள தினேஷ், இசைப்புயலின் கடல் திரைப்படத்தில் தினேஷ் பாடிய மகுடி மூலம் உலகம் முழுதும் பிரபலமாக்கியிருந்தது.
இந்தப் படத்தில் G.V.பிரகாஷ் குமாரினால் பாட அழைக்கப்பட்டதாகவும், எனினும் பாடல் வரிகளை மட்டும் எடுத்துவிட்டு தன் அனுமதியில்லாமல் அதைப் பயன்படுத்தியதாகவும் பொங்கியுள்ளார் ADK.
இப்போது குறித்த அந்தப் பாடலில் பாடல் வரிகள் என்று நா.முத்துக்குமாரின் பெயரும், பாடியவர்களில் ஒருவராக தினேஷின் பெயரும் இருக்கின்றன.
ஆனால் வரிகள் சிலது தனதே தவிர, பாடிய குரல்களில் எதுவும் தன்னுடையது அல்ல என்கிறார் தினேஷ்.
இதுபற்றி GVP இடம் கேட்டால் நேரடியாகப் பதில் கூற மறுக்கிறார் என்கிறார் தினேஷ்.
அடக்கமும், அமைதியும் , சிறிதும் பெருமையில்லாத பெருந்தன்மை உடைய இசைப்புயல் A.R.ரஹ்மான் குடும்பத்தில் இப்படி ஒருவரா என்று பொருமுகிறார் கோபத்தில் தினேஷ் கனகரட்னம்.
மௌனம் கலைப்பாரா GVP?