Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jan
28
வசதிகளை வாரிக்குவிக்கும் WhatsApp - இணைந்துகொள்ள நீங்க ரெடியா....?

whatsApp-'what sim' - வசதிகளை வாரிக்குவிக்கும் WhatsApp - இணைந்துகொள்ள நீங்க ரெடியா....?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

717 Views
வசதிகளை வாரிக்குவிக்கும் WhatsApp - இணைந்துகொள்ள நீங்க ரெடியா....?

நவீன தொழில்நுட்பப்புரட்சி மிகுந்த இன்றைய உலகில் இணையத்தின் பாவனை என்பது இன்றியமையாததாக காணப்படுகின்றது. அதிலும் சமூக வலைத்தளங்களின் உபயோகமானது சிறுவர் தொடக்கம் பெரியவர்கள் வரையும், பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரைக்கும் பேதங்களற்று பரவிக்கிடக்கின்றது எனலாம்.

தற்போதைய நிலையில், உலகளவில் பிரபலமடைந்த சமூக வலைத்தளங்களாக முகப்புத்தகம்(FACEBOOK), ருவிட்டர்(TWITTER), என்பன காணப்படுகின்றன. இவற்றோடு நவீன கைத்தொலைபேசிகளின் இயங்குதளங்களில் பயன்படுத்தப்படும் அப்ளிகேசன்களில் Viber, WhatsApp என்பனவும் அதிகளவு பயன்பாட்டாளர்களைக் கொண்டுள்ளன. அந்தவகையில், உலகளாவிய ரீதியில் 700மில்லியன் வாடிக்கையாளர்கள் கொண்டதாக WhatsApp  சமூகவலைத்தளம் காணப்படுகின்றது.

இந்தநிலையில், 700மில்லியன்  என்ற மிகப்பெரும் எண்ணிக்கையிலான பாவனையாளர்களைக் கொண்ட WhatsApp இன் வாடிக்கையாளர்களுக்காக, இத்தாலியைச் சேர்ந்த ஜீரோ மொபைல் என்ற பிரபல தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று  "What Sim" எனும் அனைவரும் வரவேற்கத்தக்க புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

எந்த ஒரு தொலைத்தொடர்புசேவை வலையமைப்பை பயன்படுத்தினாலும், ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்லும்போது, நாம் செல்கின்ற நாட்டிலிருந்து தொடர்பினை ஏற்படுத்த அந்த இணைப்பிற்கான ரோமிங் வசதியினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த ரோமிங் வசதியினைப் பெறுவதற்காக பெருந்தொகைப் பணத்தினை கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை பொதுவாக காணப்படுகின்றது. இந்தநிலையினை மாற்றி, WhatsApp சமூக வலைத்தளமானது தனது வாடிக்கையாளர்களுக்காக,சேவைக்கட்டணமற்ற இந்த "What Sim" சேவையினை வழங்குவதாக சொல்லியிருக்கின்றார்கள்.

         

அது தவிர, WhatsApp பாவனையாளர்கள் தாம் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு சேவையின் சமிக்ஞை கிடைக்காத இடங்களில், WhatsApp இனை பயன்படுத்துவதற்காக Wi-Fi இணைப்பு கிடைக்கும் இடங்களை நாடவேண்டிய நிலை முன்னர் காணப்பட்டது. ஆனால் தற்போது இந்தநிலையும் "What Sim" சேவையின் மூலமாக மாற்றி அமைக்கப்பட்டிருப்பதாகவும், இதன்மூலம் எல்லைகள் அற்ற வகையில் 150நாடுகளில் இருந்து எப்போதும் நண்பர்களுடன் தொடர்பில் இருக்க முடியும் எனவும் WhatsApp சேவையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த "What Sim" சேவைக்குரிய சிம்அட்டையை  பெற்றுக்கொள்வதற்கான கட்டணமாக 10யூரோவும், உலகில் எந்தப்பகுதிக்கு அனுப்புவதென்றாலும் அதற்குரிய பொதுவான கட்டணமாக 5யூரோவும் அறவிடப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. இந்த "What Sim" இனை பெற்றுக்கொள்ளவும், அதற்க்கான மீள்நிரப்புக் கட்டணத்தை செலுத்தவும் WhatsApp நிறுவனத்தின் இணையத்தளத்தின் சேவையினை பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறியக்கிடைத்துள்ளது.

இவை இவ்வாறிருக்க, இந்த சேவை உலகம் முழுவதும் சுலபமாக வாடிக்கையாளர்களை சென்றடையச் செய்யும் முகமாக, தற்போது இணையத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் இதன் விற்பனை நடவடிக்கை, ஒவ்வொரு நாட்டிலும் உள்ளூர் முகவர்களின் ஊடாக விநியோகிக்கும் வேலைத்திட்டம் 100 நாடுகளில் முன்னெடுக்கப்படுவதாகவும் இத்தாலியின் ஜீரோ மொபைல் நிறுவனம் தெரிவிக்கிறது.

*கணேஷமூர்த்தி ராகவன்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top