சிவப்பு ரோஜாக்கள் திரைப்படத்துக்கு பின்பாக எந்த த்ரில்லர் படங்களுக்கும் இசையமைக்காத நான், மீண்டும் இந்த ஒரு மெல்லிய கோடு படத்துக்கே ஆர்வத்தோடு இசையமைக்க ஆயத்தமாகி வருகிறேன். ஒரு சிறந்த கூட்டணியோடு பணியாற்றுவது பிடித்திருக்கிறது என, படத்தைப் பற்றி ஆரம்பத்திலேயே புகழ்ந்து கொட்டுகிறார் இசைஞானி இளையராஜா.
இதைப் பார்த்ததும், ஆர்வம் தாங்காமல் நாமும் மேற்கொண்டு விடயங்களை ஆராய்ந்தோம்.
அதாவது, முற்று முழுதாக ஆக்க்ஷன் த்ரில்லர் படமாகவும், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இந்தப் படம் இன்று தனது படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளது. ஆசன நுனிக்கு கதையின் ஓட்டம் உங்களை அழைத்துச் செல்லுமென படக்குழு இப்பொழுதே பரபரப்பை கூட்டுகிறார்கள்.
ஆஹா ரேஞ்சில் படம் அமையப் போகிறது என்பது எதிர்பார்ப்பு. இந்த ஒரு மெல்லிய கோட்டில், ஆக்க்ஷன் கிங் அர்ஜூன் நாயகனாக குதிக்கிறார். சரிந்த தனது மார்க்கெட்டை மீண்டும் கட்டிஎளுப்பும் படமாக இந்தப் படம் தனக்கு அமையுமென அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளதோடு, ''இந்தப் படத்தின் கதையை கேட்டதும் ஒத்துக் கொண்டேன். கதை கேட்டு மிரண்டு விட்டேன். என் படங்களில் மிக முக்கியமான படமாக இந்தப் படம் அமையும்'' என்கிறார் அர்ஜூன்.
-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-