நம்ம பக்கத்து வீட்டுப் பையன் போல உலாவும் நடிகர் ஜெய் நடிப்பில் காதலும், உணர்வுகளும் கொட்டப்படும் அழகிய கதையாக திரைக்கு வரவிருக்கும் படம்தான் புகழ்.
பகவதியில் விஜய்யின் தம்பியாக தன் நடிப்பை ஆரம்பித்தவர், அதன் பின்னர் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பால் சில படங்களிலேயே இரசிகர்களை தனக்கென உருவாக்கிக் கொண்டார். நடிப்பில் தேர்ந்தவராக தனது படங்களை தெரிவு செய்தார் ஜெய். அதுவே அவரது வெற்றிகளின் சாதுர்யம் எனலாம்.
மணிமாறன் இயக்கம் இந்தப் படத்தில் இவன் வேற மாதிரி திரைப்படத்தில் வந்த நாயகி சுரபி, இதிலும் நாயகியாக ஜெய்யோடு ஜோடி சேர்கிறார். காதலும் த்ரில்லும் கலந்த கதையாக உருவாகியுள்ள படம் புகழ்.
முதன் முறையாக அரசியல் சார்ந்த கதையில் ஜெய் துணிச்சலோடு நடிக்க சம்மதித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-