காற்றுள்ளவரை, த்ரீ ரோசஸ், கிச்சா வயசு 16, கோடம்பாக்கம், இராமகிருஷ்ணா போன்ற சில தமிழ் படங்களிலும், மேலும் சில தெலுங்குப் படங்களிலும் நடித்திருந்தவர் நடிகர் ஜெய் ஆகாஷ்.
எதிர்பார்த்ததைப் போல அவருக்கு ஏனோ வாய்ப்புக்கள் அமையவில்லை.
இப்பொழுது, காதலுக்கு கண்ணில்லை எனும் படத்தில் நடித்து வருகிறார். அத்தோடு இப்பொழுது ஒரு புதிய முடிவும் எடுத்துள்ளார். அதாவது சினிமாவில் தான் எதிர்பார்த்தும் கிடைக்காத வெற்றியை, அரசியலில் இணைந்து அதன்மூலமாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுவே அந்த முடிவு.
தெலுங்கா ராஷ்திரிய சமிதி கட்சியில் இணைந்துள்ள ஜெய் ஆகாஷ், அரசியலுக்கு வந்துள்ளதால் நடிப்பை மறந்து விடுவேன் என்று நினைத்து விடாதீர்கள், நடிப்பு அரசியல் இரண்டிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கை பூரிப்போடு சொல்கிறார்.
-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-