ஆர்யாவின் மதராசப் பட்டிணம் படத்தின் மூலம், தமிழுக்குள் நுழைந்த அழகுப் புயல்
எமி ஜாக்சன். தமிழே புரியாது. ஆனாலும், தமிழில் இப்பொழுது பேசப்படுகின்ற & அனைவராலும் விரும்பப்படுகின்ற நடிகை அம்மணிதான். இப்பொழுது உதயநிதியுடன் ஒரு படத்தில் நடித்துவருகின்றவர் அமைதியாக தனக்கு ஏற்ற கதைகளை தெரிவு செய்து வருகிறார்.
இந்நிலையில், எமி நிருபர்களின் கேள்விகளுக்காக மௌனம் களைந்து பேசினார். என்னை பார்க்கின்றவர்கள், நான் கவர்ச்சியான ஆடைகளுக்கும் அந்த மாதிரியான நடிப்புக்கும் தான் பொருத்தமானவள் என நினைக்கிறார்கள். ஆனால், எனக்கு அந்த ஆடைகளை விட புடவைதான் பொருத்தமானது என நான் நினைக்கிறேன். அதுதான் பெண்களை அழகாகவும் கவர்ச்சியாகவும் காட்டுகின்ற ஆடை. எனவே, உதயநிதியோடு நடிக்கும் படத்தில் மடிசார் மாமியாக நடிக்கிறேன். அதில் தான் எனது புடவைக் கனவு நிறைவேறவுள்ளது.
அத்தோடு, என்னைப் பொறுத்தவரைக்கும் பெண்களுக்கு அழகு புடவைதான். அத்தோடு கவர்ச்சியானதும் அதுவேதான் என்கிறது இந்த ஆங்கிலப் பறவை.
-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
Amy Jackson - Sexy in Bikini
Amy Jackson