சரிந்திருந்த தனது மார்க்கெட்டை ஐ படத்தின் மூலம் நிமிர்த்தி சரித்திரமாய் மாற்றி எழுதிய நடிகர் விக்ரம். நடிப்புக்கு இலக்கணமாய் இவரது பெயரும் சினிமாவின் வரலாற்றுப் பக்கத்தில் பதியப்பட்டு விட்டது என்பது உண்மை.
இந்நிலையில், ஐ கொடுத்திருக்கும் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னர், விக்ரம் அவதானமாக தனது படங்களுக்கான கதைகளை தெரிவு செய்து வருகிறார். அப்படி தெரிவு செய்த கதைதான் ''பத்து என்றதுக்குள்ள''. இந்தப்படம் நிறைவடைந்ததும்,இன்னும் இரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
கௌதம் மேனன் இயக்கம் ஒரு படத்திலும், அரிமா நம்பி இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கம் படத்திலும் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனந்த் ஷங்கர் இயக்கம் படத்தில்தான் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து புகைந்துள்ளன.
-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-