மர்மப் படங்கள், திகிலைக் கிளப்பும் படங்களுக்கு இப்பொழுது அதிகமான வரவேற்பு நம்மவர்களிடையே இருக்கிறது. கதை சொல்லுகிறோம் என, அப்படங்கள் அலட்டுவதில்லை. பொழுதை நல்லபடியாக சந்தோஷப்படுத்தி சிரிக்க வைத்து சிந்திக்க வைத்துப் போகும் படங்களாக மூன்று மணிநேரம் அனைவரிடம் ஒன்றித்துப் போகிறது இவ்வாறு வருகின்ற படங்கள்.
இவைகள், ஏற்படுத்தியுள்ள அடையாளங்கள் ஆதிக்கம் என்பன தமிழ் சினிமாவில் அதிகமெனலாம். இந்த வகையில் காஞ்சனா, அரண்மனை படங்களில் தேர்ந்த நடிப்பால் அனைவரிடத்திலும் தெரியப்பட்ட நடிகை ராய் லட்சுமிக்கு இப்பொழுது மூன்றாவதாகவும் ஒரு பேய் படத்தில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. அவரும் சம்மதித்து நடித்துக்கொண்டிருக்கிறார்.
ஸ்ரீகாந்த் ஹீரோவாகவும், ராய் லட்சுமி நாயகியாகவும் இணையும் இப்படத்துக்கு சௌகார்பேட்டை என பெயரிடப்பட்டுள்ளது. திகிலோடும் பரபரப்போடும் இப்படம் திரைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக, ஸ்ரீகாந்துக்கு இந்த பேய் படமாவது வாய்ப்புக்களை வழங்கட்டும்.
-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-