தமிழில் ஒரு காலத்தில் சதாவும் முன்னணி நடிகைதான் . ஷங்கரின் அந்நியன் படம் அந்த அந்தஸ்தை அவருக்கு கொடுத்தது . ஜெயம் திரைப்படம் மூலம் சதாவை அணைத்துகொண்ட தமிழ் சினிமா புலிவேஷம் படத்தோடு அவரை கைகழுவி விட்டது .
திறமையான நடிகைதான் ஆனால் போட்டிகள் புது வரவுகள் இவரை ஓரம் கட்ட வைத்தது . மீண்டும் தெலுங்கு தேசம் சென்றார். ஆனால் அங்கும் இதே நிலைதான். ஆனாலும் ... மீண்டும் வாழவைக்க வடிவேலு இவரை அழைக்கிறார் தமிழுக்கு!
இந்த காமெடி கிங் நடிக்கும் எலி படத்தில், ஒரு முக்கிய வேடத்திற்காக இவர் மீண்டும் அழைக்கப்பட்டிருக்குறார். இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் ....
ஆக புலியோடு போனவர் எலியோடு வருகிறார்
- கந்தப்பன் பிரசாந்த் -