1978இல் கமல் ஜோடியாக ஸ்ரீதேவி நடிக்க, பாரதிராஜா இயக்க இசைஞானி இசையமைக்க வெளியான படம் தான் சிகப்பு ரோஜாக்கள். இந்தப் படம் வழமையான படங்கள் மத்தியில் வித்தியாசமான படமாக வந்து சேர்ந்தது.
கமலுக்கும் ஸ்ரீதேவிக்கும் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்த படமாக இடம் பிடித்தது அந்தப் படம்.
வழமையாக, நாயகர்கள் செய்யாத வில்லத்தனமான நடிப்பில் வந்தார் கமல். அதாவது, பெண்களை கொலை செய்து வக்கிரம் தீர்ப்பவராகவே இதில் கமல் நடித்திருந்தார்.
இப்பொழுது, மீண்டும் இந்த சிகப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகமாக எடுக்கப்படுகிறது. பாரதிராஜாவின் மகன், மனோஜ் இப்படத்தை எடுக்க ஆயத்தமாகி வருகிறார். இந்தப் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனவே, ஸ்ரீதேவிக்கு நல்ல அடையாளத்தை வழங்கிய இயக்குனர் பாரதிராஜாவுக்காக என்றாலும், ஸ்ரீதேவி இதில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-கோடம்பாக்கக் குருவி-