தனுஷின் அந்தரங்கம் கூட தெரிந்த, அளவுக்கு மீறிய நட்போடு உள்ளவர் அனிருத். இந்த தனுஷ் & அனிருத் ஜோடியின் அத்தனை கூட்டணியும் வெற்றியடைந்தவை தான். மீண்டும் மீண்டும் இவர்கள் இருவருக்குமிடையில் உள்ள அன்பின் அடையாளமாக அடுத்தடுத்த படங்களிலும் அனிருத்தையே ஒப்பந்தம் செய்கிறார் தனுஷ்.
இந்நிலையில், இப்பொழுது கிடைத்திருக்கும் செய்தி கொஞ்சம் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. அதாவது, பிரச்சினைகளால் பிரபலமான நடிகர் வம்பு, ஸாரி .. சிம்புவுடன் அவரது புதுப்படத்தில் இணைகிறார் அனிருத். வணக்கம் சென்னை படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதிதான் இப்படத்தையும் இயக்கவுள்ளார். ஏனைய நட்சத்திரங்கள் பற்றிய தெரிவுகள் நடைபெற்று வருகின்றன.
அத்தோடு, சிம்பு நடிப்பில் பல படங்கள் கிடப்பில் இருக்கையில், புதிய படங்களின் பட்டியல்தான் நீண்டு செல்கிறது. நமக்கென்ன, வரும் படங்கள் வரட்டும். நல்ல எழுதித் தள்ளுவோம். ஆனாலும், தனுஷிடமிருந்து அணிருத்தைப் பிரிக்கும் திட்டமா இது என்றும் ஒரு தரப்பு பேசி வருகிறது. எது எப்படியோ, நல்லா பண்ணுங்க அனிருத் !!
-கோடம்பாக்கக் குருவி-