2,254 Views
கைபேசி காதல்’ படம் குறித்து இதன் இயக்குனர் திம்மம்பள்ளி சந்த்ரா கூறுகையில், “இன்றைய மனிதர்களுக்கு ஆடம்பர பொருட்கள்மேல் மோகம் அதிகரித்துள்ளது. சக மனிதர்கள் மேல் வைக்கும் அன்பு, பாசம், நேசம் குறைந்துவிட்டது.
“கைபேசியை காதலியாக நினைத்து காதலிக்கும் ஒரு இளைஞனின் விபரீதமான மனநிலையை விளக்கும் கதையே இப்படம். கைபேசியை அதிகம் நேசித்தால் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறோம்.
“ஹீரோவின் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பது அவனது கைபேசிதான். அவனது வாழ்க்கையின் மகிழ்ச்சி, துக்கம் என அனைத்தையும் அதுவே தீர்மானிக்கிறது. அவனது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அவனது செல்போனே தீர்மானிக்கிறது. அதனால் அவனுக்கு தனது செல்போன் மீதே காதல் வந்துவிடுகிறது.
“அதன்பிறகு அவனது வாழ்க்கையில் நடக்கும் சில நிகழ்வுகளால் விபரீதமான முடிவுகள் ஏற்படுகின்றன. இப்படியொரு வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகியிருக்கும் படம்தான் ‘கைபேசி காதல்’. இது விரைவில் திரைக்கு வர இருக்கிறது” என்றார்.
ஒளிப்பதிவு– ராகேஷ்.சி.திலக்
இசை– விஜய் கிருஷ்ணா
தயாரிப்பு நிர்வாகம் – சிவக்குமார்
தயாரிப்பு – த.சக்திவேல்
எழுத்து, இயக்கம்– திம்மம்பள்ளி சந்த்ரா
==CASTRO RAHUL ==