நடிகையாக நடிகை இனியா
iniya # r.k #shaaji kailash - நடிகையாக நடிகை இனியாSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
வாகை சூடவா, மௌனகுரு, சென்னையில் ஒரு நாள், மாசாணி, நான் சிகப்பு மனிதன் போன்ற நல்ல படங்களில் நடித்து, தனக்கென ஒரு இரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டவர் நடிகை இனியா.
இப்பொழுது இவர் இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் வைகை எக்ஸ்பிரஸ் எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நாயகனாக ஆர்.கேயும் நாயகியாக நீது சந்திராவும் நடிக்க, நடிகையாகவே நடிக்கிறார் இனியா. அதாவது ஸ்வப்னா ப்ரியா எனும் பெயரோடு வரும் நடிகையாக வருகிறார்.
யாருடைய தனிப்பட்ட வாழ்வு இதில் படமாகிறதோ என எமக்கும் சந்தேகம் இருந்தாலும், படம் வரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம். இனியாவுக்கு இந்தப்படம் இன்னும் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுக்கிறதா என்பத படம் வந்த பின்னர் சொல்கிறோம்.
-கோடம்பாக்கக் குருவி-