உங்கள் கைப்பட எழுதி வாழ்த்துக்கள் அனுப்பும் வசதி-அசத்தல் அறிமுகம் கூகிள் மூலம்.
பண்டிகைக் காலங்களில் வாழ்த்துக்களை நாமெல்லாம் அனுப்புவது வழமையானதுவே,எங்களது சொந்தங்கள் ,உறவுகள்,நட்புக்கள் என்று எல்லோருக்குமான வாழ்த்துக்களையும் நாங்கள் அந்த நாட்களில் கடிதம் மூலமாக அனுப்பி அதன் பதிலுக்காக பல நாட்கள் காத்திருப்பது வழமையானது.
ஆனால் இந்த காலத்தின் இணையப் புரட்சி மூலமாக SMS , E cards, E Mail என்று அத்தனை வாழ்த்துக்களையும் உடனுக்குடன் அனுப்பி மகிழ்கிறோம்.
ஆனால் இதிலே ஒருவித குறைபாடு இருக்கிறது என்பதை கணடறிந்த Google நிறுவனம் பயனர்களின் வசதியை இன்னுமின்னும் விரிவாக்கும் நோக்கில் அவர்களது கைப்பட எழுதிய வாழ்த்துக்கள்,செய்திகளை அனுப்பும் வசதியை உருவாக்கியிருக்கிறார்கள்.
அதாவது உங்கள் கை விரல்களால் எழுதி, அதனை MESSAGE ஆக அனுப்பும் கையெழுத்து உள்ளீடு -Google Handwriting Input அப்ளிக்கேஷனை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
நாங்கள் எல்லோரும் பயன்படுத்தும் தமிழ்மொழி உள்ளீடு மூலமாகவும் இனிவரும் நாட்களில் நாம் செய்திகளையும் வாழ்த்துக்களையும் அனுப்பலாம் என்பதே இதன் சிறப்பம்சமாகும்.
ஒட்டுமொத்தம் 82 மொழிகளில் MESSAGE களை கைப்பட எழுதி அனுப்பக் கூடிய வகையில் இந்த புதிய அப்ளிகேஷன் Android கைபேசிகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.இதில் கை விரல்களால் விடையத்தை வரைந்தும் MESSAGE களை அனுப்ப முடியும்.
Play Store ரில் கூகுள் கையெழுத்து உள்ளீடு அப்ளிக்கேஷனை Android பயனாளிகள் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.எழுத்துக்களை எழுத்தாணியுடனும் அல்லது வெறும் விரல்களாலும் எழுத முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதைவிட எங்களுக்கு இன்னுமென்ன வேணும்..?
ஜமாய்க்கலாம் வாருங்கள் ..!
*தி.தரணீதரன்.