யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து தாய் மற்றும் மூன்று பிள்ளைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் காவல் துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த குடும்பத்தின் குடும்ப தலைவர் சில மாதங்களுக்கு முன்னர் பண பிரச்சினையால் தங்க ஆபரணங்களுக்கு கலவை செய்யப்படும் ஒருவரை திரவத்தை அருந்தி தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தை உயிரிழந்த பின்னர் தாய் புதல்வர்கள் இருவர் மற்றும் புதல்வியும் வாழ்ந்து வந்துள்ளனர்.
இன்று முற்பகல் குளிர்களியில் (ஐஸ்கிரீம்) விசத்தினை கலவை செய்து பிள்ளைகளுக்கு கொடுத்துள்ளதுடன், தாய் உணவில் விசத்தினை கலந்து உட்கொண்டு இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிள்ளைகள் மூவருக்கு விசத்தினை கொடுத்த பின்னர் அவர்கள் தரை விரிப்பில் சுற்றப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீட்டிலிருந்து எவரும் வெளியில் வராத நிலையில் அயலவர்களல் குறித்த வீட்டிற்கு சென்ற பொழுது நால்வரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து காவல் துறையினருக்கு தகவல் வழங்கக்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலங்கள் மீட்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அம்மா மற்றும் புதல்வர்களின் வாய் வழியாக இரத்தம் கசித்திருந்ததாகவும் காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
28 வயதுடைய தாயும், 4 வயதுடைய புதல்வியும், 2 மற்றும் 1 வயதுடைய புதல்வர்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.