3,708 Views
இன்று காலை மன்னார் குடியில் உள்ள சசிகலா குடும்பத்தினரின் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் ஜெயா டிவி அலுவலகத்திலும் வருமான வரிதுறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
காலை 6 மணி முதல் வருமான வரிதுறையினர் சசிகலாவின் பல்வேறு உறவினர்களின் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தினகரன் மற்றும் ஜெயா டிவி நிர்வாக இயக்குனர் விவேக் மற்றும் ஈக்காட்டுதாங்கலில் உள்ள நமது எம்ஜிஆர் அலுவலகம் போன்ற இடங்களில் வருமான வரிதுறையினர் சோதனை நடத்தினர்.
இதனையடுத்து சசிகலா சகோதரர் திவாகரன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
திவாகரனின் உதவியாளர் விநாயகம் வீட்டிலும், அணியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ். காமராஜர் வீட்டிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
தஞ்சையில் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் டிடிவி தினகரன் ஆதரவாளர் வேலு கார்த்திக்கேயன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும் , இந்த சோதனை தொடர்பிலான மேலதிக தகவல்கள் ஏதும் இதுவரை வௌியாகவில்லை.