நாட்டின் சட்டத்தை அனைத்து தரப்பினருக்கும் நியாயத்தை வழங்கக் கூடிய வகையில் செயற்படுத்துவதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெந்தல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பொது சமாதான மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
நாட்டில் முறையான சட்டம் இருக்க வேண்டும். சாதாரண தரப்பினருக்கு ஒருவிதமாகவும், பலமிக்கவர்களுக்கு இன்னொருவிதமாகவும் இருக்க கூடாது.
அண்மைக்காலமாக சில முக்கிய தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்தது. கடந்த அரசாங்கத்தின் பிரபலம் வாய்ந்தவர்களை கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதன்போது இடம்பெற்ற விசாரணைகளில் 2 ஆயிரம் மில்லியன் ரூபாவுக்கு என்ன நடத்தது என்றே தெரியாத நிலை புலப்பட்டது.
ஏதேனும் ஒரு தரப்பினரின் ஊழல் மோசடிகள் தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்தால் அதுபற்றி கூடிய கவனம் செலுத்தப்படும்.
அந்த வகையில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.