நடிகர்கள் புதியதாய் என்ன வாங்கினாலும் உடனே பரபரப்பாக ரசிகர்களிடம் போய்ச் சேர்ந்து விடுவது வழக்கம்.
அதிலும் அதிக ரசிகர்களைக் கொண்டவர்கள் என்ன ரகசியமாக செய்தாலும் உடனேயே எங்கேயாவதிருந்து தகவல்கள் வந்துவிடும்.
இவ்வளவு நாளும் சாதாரண கார் ஒன்றைப் பயன்படுத்தி வந்த கார், மோட்டார் சைக்கிள் பிரியர் அஜித் நவீன பாணி, விலையுயர்ந்த கார் ஒன்றை வாங்கியிருப்பதாக தகவல்கள் பரவியிருக்கின்றன.
BMW I8 எனப்பபடும் அதிசொகுசு, நவீன ரக காரையே அஜித் வாங்கியிருப்பதாக சென்னையிலிருந்து புகைப்படங்களுடன் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இனி கார் பிரியர் தல கலக்கலாக உலா வரப்போகும் கார் இது தானாம்.
இப்போது சென்னை போக்குவரத்து திணைக்களத்தில் இலக்கப் பதிவுக்காக காத்திருக்கிறது.