5,517 Views
வை.கே. கிரியம்மா என்ற 70 வயது பெண்ணொருவரும் , 45 வயதான வை.கே. காமினி என்ற நபருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த பெண்ணின் மகன் கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மனவேதனையில் இருந்த தாய் , நேற்றைய தினம் சுயநினைவற்று இருந்துள்ளார்.
இதனையடுத்து அவரது உறவினர்கள் அவரை வைத்தியசாலைக்கு கொண்டுசென்றிருந்த போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் வீடு திரும்பிய உறவினர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காமினி உறக்கத்திலேயே உயிரிழந்துள்ளமையை கண்டறிந்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.