Economic Centre - இன்று காலை இடம்பெற்றுள்ள பெரும் பரபரப்பு சம்பவம்..!! C.C.T.V காணொளிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
5,931 Views
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தியில் நித்திரையிலிருந்த நபர் ஒருவரின் உடல் மீது பாரவூர்தி பயணித்ததினால் நித்திரையில் இருந்த நபர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை 4.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு பிரதேசத்தில் இருந்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு தொழில் புரிய வந்துள்ள நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து அறியவந்துள்ளது.
நித்திரையில் இருந்த நபரின் உடல் மீது பாரவூர்தி பயணிக்கும் காணொளி, அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.
உயிரிழந்துள்ள நபர் போதையில், பொருளாதார மத்திய நிலையத்திற்கு வந்துள்ள நிலையில், அங்கு வட்டக்காய் தொகைகளை மறைத்து வைப்பதற்கு பயன்படுத்திய போர்வையினால் உடல் பகுதியினை மறைத்து வீதியில் நித்திரை செய்வது காணொளியில் பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும் அதிகாலை தம்புள்ளை காவற்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளதுடன், சம்பவம் எவ்வாறு நடந்தது..? என்பது குறித்து தெரியவரவில்லை.
இந்நிலையில், அங்கு பாரவூர்தி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், காவற்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது பாரவூர்தியின் சாரதி பாரவூர்தியில் இருக்க வில்லை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, காவற்துறையினர் பாரவூர்தியின் சாரதியினை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவினை பரிசோதனை செய்துள்ளனர்.
இதன்போது, பாரவூர்தியினை செலுத்திய சாரதியின் தந்திரமான செயல் அறியவந்துள்ளமை ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் இடம்பெற்றதன் பின்னர், பாரவூர்தியின் சாரதி, பாரவூர்தியினை முன்னால் நிறுத்தி அதன் அருகாமையில் இருந்த முச்சக்கர வண்டி ஒன்றினை சம்பவ இடத்தில் நிறுத்தி விட்டு, அங்கு இருந்து வெளியேறி செல்லும் காட்சியும் பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.
சம்பவம் குறித்து காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.