Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

அப்பா உன்னிகிருஷ்ணனைப் போலவே முதன் முதலாக சினிமாவில் பாடிய பாடலுக்கு தேசிய விருது பெற்றுள்ளார் அவரது மகள் உத்ரா. ஒரே ஒரு வித்தியாசம் அப்பா பாடியது ஏ.ஆர். ரகுமான் இசையில் மகள் பாடியது அவரது மருமகன் ஜி.வி.பிரகாஷ் இசையில் என்பதுதான்.

 நான்கு வயதில் இருந்து கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டிருந்தாலும் முதன் முதலாக சைவம் படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் குழந்தைக்காக பாடல் பாடினார் உத்ரா.

 

இவர் பிரபல கர்நாடக இசைப்பாடகரும், திரைப்பட பாடகருமான உன்னிகிருஷ்ணனின் மகளாவார். சைந்தவி வீட்டில் கொலுவிற்கு பாடிய உத்ராவிற்கு திடீரென ‘அழகே அழகு' பாடலை பாடும் வாய்ப்பு கிடைத்தது என்கிறார் உன்னி கிருஷ்ணன்.

சில நிமிடங்கள் மட்டுமே சினிமா பாடலை பயிற்சி செய்த உத்ரா பாடியது இசையமைப்பாளருக்கு பிடிக்கவே,இயக்குநரும் ஓகே சொல்ல இந்த பாடலைப் பாடும் வாய்ப்பு கிடைத்தது என்று கூறியுள்ளார் உன்னி கிருஷ்ணன்.

 

அப்பா போல முதல் பாடலில் விருது... அப்பாவுக்கு மாமா.. மகளுக்கு மாப்பிள்ளை!

முதல் பாடலுக்கு விருது

கர்நாடக சங்கீதம், மேற்கத்திய இசைகள் பாடினாலும் புதிய பாடலை முதன் முறையாக சைவம் படத்தில் அழகே... அழகு என்று பாடி அதற்கு தேசிய விருது பெற்றுள்ளார்

முத்துக்குமாரின் வரிகள்

பாடலாசிரியர் முத்துக்குமாரின் அழகான எளிமையான வரிகள் தனது மகளுக்கு பாட எளிதாக இருந்தது என்று கூறியுள்ள உன்னி கிருஷ்ணன் வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.

அப்பாவுக்கும் தேசிய விருது

21 ஆண்டுகளுக்கு முன்னர் காதலன் படத்தில் ஜி.வி.பிரகாஷின் மாமா ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் முதன் முதலாக ‘என்னவளே... அடி என்னவளே...' என்று பாடி தேசிய விருது வாங்கினார் உன்னிகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.


========CASTRO RAHUL ========

547 Views

லிங்கா படத்துக்கு விநியோகஸ்தர்கள் நஷ்ட ஈடு கேட்டது தவறு என்று நடிகர் கமல் ஹாஸன் கூறினார். தனது அடுத்த படமான உத்தம வில்லன் குறித்து முதல் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் கமல்.

அவரது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது, கமலிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன.

திரைப்படங்களுக்கு வினியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்பது பற்றி உங்கள் கருத்து என்ன.. சமீபத்தில் நடந்தது (லிங்கா) உங்களுக்கே தெரியும்.. என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அவர், "சினிமா என்பது தயாரிப்பாளர்களுக்கு வியாபாரம். வினியோகஸ்தர்களுக்கு கலை. வியாபாரம் முடிந்தபிறகு நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று பணத்தை திருப்பி கேட்பது தவறு.

ரசிகர்கள் படம் பார்க்க வருகிறார்கள். பாதியில் எழுந்து படம் பிடிக்கவில்லை. பாதிப் பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டால் எப்படி முடியும்? அது சாத்தியமானது அல்ல. பாதி பணத்தை எடுத்துக் கொண்டு மீதி பணத்தை தாருங்கள் என்று ரசிகர்கள் கேட்டால் நன்றாக இருக்குமா? அதுபோல்தான் விநியோகஸ்தர்கள் பணத்தை திருப்பிக் கேட்பதும்," என்றார்.

அப்போது கமல் நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வரூபம்' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதில் ஏன் இவ்வளவு தாமதம், தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் உங்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுதான் காரணமா? என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த கமல்

"எங்களுக்குள் நிச்சயமாக கருத்து வேறுபாடு கிடையாது ஆனால் இந்தப் படம் தாமதமாவதற்கு சில காரணங்களைச் சொல்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். அவை நிச்சயம் ஏற்கும்படி இல்லை என்பதுதான் உண்மை.

அவர் பணக் கஷ்டத்தில் இருப்பதுபோலவும் தெரியவில்லை. இருந்தும் இப்படத்தை வெளியிடுவதில் ஏன் தாமதப்படுத்திகிறார் என்றுதான் புரியவில்லை," என்றார்.

விஸ்வரூபம் முதல் பாகம் வெளியானபோதே, இரண்டாம் பகுதியின் பெருமளவு காட்சிகளை முடித்துவிட்டிருந்தார் கமல். ஆனால் படம் வெளிவந்தபாடில்லை. அந்தப் படம் முடிந்த பிறகு, அடுத்தடுத்து உத்தம வில்லன், பாபநாசம் படங்களில் நடித்துவிட்ட கமல், மேலும் இரு புதிய படங்களில் நடிக்க பேசி வருகிறார்.

ஆனால் விஸ்வரூபம் 2 படத்தின் வர்த்தகம் எதிர்ப்பார்த்த அளவு இல்லாததால், தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் படத்தை திரும்ப கமலிடமே திருப்பித் தந்துவிடும் முடிவில் இருப்பதாக ஒரு பேச்சு நிலவுகிறது.


======CASTRO RAHUL=======
277 Views
வருடந்தோறும் திரைத் துறையினரை கௌரவிக்கும் வகையில் இந்திய மத்திய அரசு, தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், அகடந்த வருடத்துக்கான படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான விருதுகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவை உங்களுக்காக....

சிறந்த துணை நடிகர்- பாபி சிம்ஹா(ஜிகர்தண்டா)

சிறந்த தமிழ்(மாநில விருது) படம்- குற்றம் கடிதல்

சிறந்த நடிகை- கங்கனா ரன்வத்(குயின்)

சிறந்த பின்னணி பாடகி- உத்ரா உன்னிகிருஷ்ணன்

சிறந்த எடிட்டர்- விவேக்ஹர்ஷன்(ஜிகர்தண்டா)

சிறந்த நடிகர்- கன்னடம் விஜய் (நானு அவனல்ல அவலு)

சிறந்து புத்தகம்- தனஞ்செயன்(Pride of Tamil cinema)

சிறந்த பாடலாசிரியர்- நா.முத்துக்குமார் (சைவம்)

சிறந்த பின்னணி பாடகர்- சுஷ்வந்த் சிங் (ஹைடர்)

சிறந்த இசையமைப்பாளர்- விஷால் பரத்வாஜ் (ஹைடர்)

சிறந்த பின்னணி இசை- கோபி சந்தர் (1983)

குழந்தைகளுக்கான சிறந்த படம்- காக்கா முட்டை

சிறந்த பொழுதுபோக்கு படம்- மேரி கோம்

- கோடம்பாக்கக் குருவி-
519 Views
நாங்களும் வருவம்டி என்ற வகையில், ஒல்லிப்பிச்சான் உடம்போடு களமிறங்கி தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்தவர் நடிகர் தனுஷ். தமிழ் மட்டுமில்லாமல், ஹிந்தியிலும் தனது திறமையால் இன்று மின்னும் நட்சத்திரம் இவர்!

இப்பொழுது தனுஷ், மீண்டும் வேலையில்லாப் பட்டதாரி படக் குழுவோடு நடித்து வரும் நிலையில், இந்தப் படத்தை முடித்த கையேடு பிரபு சாமான் இயக்கத்திலும் இமானின் இசையில் வளரும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது ஏற்கனவே உங்கள் அனைவருக்கும் தெரியும்.

புது விஷயம் என்னவென்றால், இந்தப் படத்தில் சமையல் கலையில் சிறந்த கலைஞராக நடிக்கிறார் தன்சுஹ் என தகவல் வந்துள்ளது. அப்போ படம் முழுக்க சமித்து சாப்பாடு பரிமாறப் போகிறாரா? நல்லது ராஜா...!!

-கோடம்பாக்கக் குருவி-
266 Views
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம், தமிழ் சினிமாவுக்குள் தன் பொற்பாதத்தை பதித்தவர் அழகு நடிகை ஆண்ட்ரியா. பாடகி நடிகை பின்னணி பேசுகின்றவரென பல அவதாரங்களைக் கொண்டவர் ஆண்ட்ரியா.
இந்தவாரம் இவரது நடிப்பில், வலியவன் வரவுள்ளது.

இந்த விஷயம் இப்படியிருக்க, மலையாளத்தில் ஒரு படத்தில் நடிப்பதற்கு அம்மணிக்கு வாய்ப்பு வந்துள்ளது. கதை பிடித்திருக்கிறது. கூட நடிக்கின்றவர்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள். ஆனாலும், இறுதியில் இயக்குனர் சொன்ன விசயத்தினால், ஆண்ட்ரியா ஆத்திரமுற்றுள்ளார்.

என்ன சொல்லியிருப்பார் என்று யோசிக்கிறீங்க தானே? அதாவது, கதைப்படி நாயகி தனது தலைமுடியில் அரைவாசியை வெட்டிக் கொள்ள வேண்டுமாம். என்னது? ஆண்ட்ரியா தலைமுடி இல்லாமலா? கடல்ல விழுந்து சாகுப்பான்னு நமக்கே சொல்லத் தோன்றுகிறது அல்லவா? அதேதான் அம்மணியும் சொல்லி, இயக்குனரை கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ள முடியாதளவுக்கு அனுப்பியுள்ளார்.

-கோடம்பாக்கக் குருவி-
275 Views
பதினான்காம் நூற்றாண்டில் ஒரு முக்கியத் துறைமுகமாக மாறிய சிங்கப்பூர், இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானிடம் பிடிபடுகிறது. மிகப்பெரிய தாக்குதலையும் பாதிப்பையும் அடைந்த சிங்கப்பூர் போரின் முடிவில், தன்னாட்சி பெற்ற அரசாக மாறுகிறது. குடிக்க தண்ணீர்கூட இல்லாத ஒரு தீவாகா, நாடாக இருக்கும் சிங்கப்பூர் தாமாக விரும்பி 1963ஆம் ஆண்டு தன்னை மலேசியாவுடன் இணைத்துக் கொள்கிறது.

1965ல் மலேசியா சிங்கப்பூரை தன்னிடமிருந்து விடுவிக்கிறது, பிரித்துவிடுகிறது அல்லது சுதந்திரம் கொடுக்கிறது. உலகவரலாற்றில் தாம் விரும்பாமல், கேட்காமல் சுதந்திரம் என்ற பெயரில் கழட்டிவிடப்பட்ட ஒரு தேசம் சிங்கப்பூராகத்தான் இருக்க வேண்டும்.

1965ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதி மலேசியாவின் தந்தை என அழைக்கப்படும் அப்போதை பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் சிங்கப்பூர் பிரித்துவிடப்பட்டதை அறிவிப்பதையும், பிரித்துவிடப்பட்டது குறித்து தன் உணர்வுகளை அழுகையோடு சிங்கப்பூரின் தந்தை ”லீ க்வான் யூ” வெளிப்படுத்தினார்.

1965ல் பிரித்துவிடப்பட்ட சிங்கப்பூர் தனது பொன்விழாவைக் கொண்டாடுகிறது. SG50 என்ற முழக்கம் நாடெங்கும் ஒளிர்கிறது. ஒவ்வொரு மக்களின் பிரார்த்தனையும் ”லீ க்வான் யூ” குறைந்தபட்சம் வருகின்ற செப்டம்பர் 9 வரையேனும் நலமாய் இருக்க வேண்டுமென்பதாகவே இருந்தது. ஆனாலும் மரணம் சற்று முன்கூட்டியே வென்றிருக்கிறது.


பால்ய காலம் முழுதும் மலேசியாவுடனானது என வலியோடு பகிரும் ”லீ க்வான் யூ”, மலேசியா இல்லாமல் ”சிங்கப்பூர் வாழமுடியாது” என்றும் பிரகடனப்படுத்துகிறார். உழைப்பும், தீர்க்கமும், காலமும், அவருடைய பிரகடனத்தையே அவருடைய மற்றொரு பிரகடனம் கொண்டு முறித்துப் போடுகிறது.

அவரின் நம்பிக்கை அவராலேயே தோற்கடிக்கப்படுகிறது. ஆமாம், பிறிதொரு சமயத்தில், எந்த வாயால் சிங்கப்பூரால் வாழமுடியாது என்று சொன்னாரோ அதே வாயால் திடமாய், உரத்த குரலில் அவரே பிரகடனப்படுத்துகிறார் ”மற்றவர்களின் விளையாட்டை ஆடுவதற்காக நான் இங்கில்லை. நான் பல லட்சம் மக்களின் வாழ்வைக் கொண்டிருக்கிறேன்.” ஒரு சிறிய மௌனத்திற்குப் பிறகு அழுத்தமாய் அறிவிக்கிறார் ”சிங்கப்பூர் வாழ்ந்து காட்டும்”. சிங்கப்பூர் வாழ மட்டும் செய்யவில்லை… உலகத்தின் முன் வென்று காட்டியிருக்கிறது.


லீ க்வான் யூயின் வாழ்க்கை :

லீ க்வான் யூ, செப் 16ம்தேதி 1923 இல் சிங்கப்பூரில் வசதியான சீனக்குடும்பத்தில் பிறந்தார் . இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர் ,1950 இல், கேம்ப்ரிட்ஜ் பிட்ஸ்வில்லியம் கல்லூரியில் சட்டம்பயின்றார் . 1954 இல் மக்கள் செயல் கட்சியின் செக்ரட்டரி ஜெனரல் ஆனார் .


1955 இல் சிங்கப்பூரின் புதிய அரசியல் சட்டம் அமுலாக்காரணமாக இருந்தார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை , நியமன உறுப்பினரையும் சேர்த்து 32 ஆகஉயர இவரே காரணம் .மலேசியாவிலிருந்து திடீரென பிரிந்தபோது , கண்ணீரோடு ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டு , தனது தொலைநோக்குச் சிந்தனையால் நவீனசிங்கப்பூரை உருவாக்கினார் .1959 முதல்தொடர்ந்து 1990 வரை , உலகின் நீண்டகாலப்பிரதமர் என்ற வரலாற்றைப்பெற்றார் .

12 நவம்பர் 1954 இல் மக்கள் செயல் கட்சி தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை அக்கட்சியே, அங்குஆட்சி புரிந்துவருகிறது .1992 வரை அக்கட்சியின் செக்ரட்டரி ஜெனரலாக இருந்தார் .5,ஜூன் 1959 இல். முதல்பிரதமர்ஆனார். 1963இல் மலேசிய பெடரெசனில் இணையபாடுபட்டார்.

1965 ஆகஸ்ட் 7 இல் மலேசியாவிலிருந்து பிரிய ஒப்பந்தம் ஏற்படக் காரணமாக இருந்தார். அதன் பிறகு சுயாட்சி பெற்ற சுதந்திரக்குடியரசு எனப் பிரகடனப்படுத்தினார். வெளிநாட்டு மூலதனத்தைப் பெருக்க முற்பட்டார். 1968, 1972, 1976, 1980 ஆகிய தேர்தலில் இவரது மக்கள் செயல்கட்சி மகத்தான வெற்றி பெற்றது. இன்று வரை இக்கட்சியே ஆட்சியில் உள்ளது. இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் லீசி யான் லூங் தான்இன்றைய பிரதமர்.


சுத்தத்தை போற்றியவர்:

சிங்கப்பூரின் தந்தை என்றழைக்கப்படும் லீ க்வான் யூ, சுத்தத்தை அதிகம் விரும்பியவர். அவர் பிரதமராக பதவிவகித்த காலங்களில், ஆயிரக்கணக்கான தொண்டு ஊழியர்களுடன் தானும் இணைந்து, சிங்கப்பூர் நகரத்தின் தெருக்கைகூட்டிசுத்தம் செய்தார். இதற்குபின்னரே, சிங்கப்பூர் மக்கள் சுத்தம் குறித்த அவசியத்தை உணரத்துவங்கினர். இன்று, சிங்கப்பூர் நகரம் தூய்மையாக இருப்பதன்பின்னணி இது தான்.


அனைவருக்கும் வீடு: 

சிங்கப்பூரில் வசிக்கும் அனைவருக்கும் வீடு என்பதை தனது லட்சியமாக கொண்டிருந்தார் லீ க்வான்யூ. அந்தகாலத்தில், சிங்கப்பூர் எதிர்நோக்கியிருந்த முக்கிய, சிக்கலானபிரச்னைகளில் ஒன்று குடியிருப்புக்கள். ஓட்டுக்குடித்தனங்களில் தான் மக்கள் வாழ்ந்தனர்.

பிரிட்டிஷ் குழு ஒன்று அளித்தஅறிக்கையில், உலகின் மிக மோசமான சேரிகளைகொண்ட இடம்சிங்கப்பூர் என்று குறிப்பிடப்பட்டது. மேலும், இது நாகரீக சமுதாயத்திற்கு ஒருஅவமானம் என்றும் அறிக்கைசுட்டிக்காட்டியது.

வெகுண்டு எழுந்த லீ, தான் பிரதமர் ஆனவுடன், கடந்த 1960ம் ஆண்டில், வீடமைப்பு வளர்ச்சிகழகத்தை துவக்கி, ஐந்தே ஆண்டுகளுக்குள் 54 ஆயிரம்குடியிருப்புக்களை உருவாக்கினார். இதனால், இன்று சிங்கப்பூரில் வசிக்கும் 82 சதவீத மக்கள் சொந்த அல்லது வீடமைப்பு வளர்ச்சிகழகவீடுகளில் வசிக்கின்றனர். லீயின் இந்தசாதனை இன்றுவரை உலகளவில்போற்றப்படுகிறது.

பாதுகாப்புக்கு அடித்தளமிட்டவர்:

குட்டி நாடாக இருந்தாலும், பலமிக்க இராணுவத்தை கொண்டதாக உள்ளது சிங்கப்பூர். இதற்கு லீயின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே காரணம் ஆகும். கடந்த 1963ம் ஆண்டு, சிங்கப்பூரை இந்தோனேஷியா படைதாக்கியது. அந்ததாக்குதலை எதிர்கொள்ளமுடியாமல் சிங்கப்பூர் தவித்தது. இந்ததாக்குதலுக்குபின்னர், பலமான இராணுவத்தை உருவாக்க நினைத்தார் லீ.

உடனடியாக கட்டாய இராணுவசேவை திட்டத்தை அமல்படுத்தினார். 1967ம் ஆண்டு சிங்கப்பூரில் கட்டாயராணுவசேவை அறிமுகமானது. இதனால், சிங்கப்பூர் இராணுவம் பலம் கொண்டதாகமாறியது



லீயின் மறைவுக்கு உலகத் தலைவர்களின் இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடி:

சிங்கப்பூர் தந்தையும் முன்னாள் பிரதமருமான லீ க்வான் யூமரணமடைந்த துமிகவும் வேதனை அளிக்கிறது. தருணம். தொலை நோக்குப்பார்வையுடன் தலைவர்கள் மத்தியில் சிங்கமாகத்திகழ்ந்தவர். லீயின் வாழ்க்கை நமக்கு நிறைய பாடங்களை அளிப்பதாக இருக்கிறது.


அமெரிக்க அதிபர் ஒபாமா: 

லீயை இழந்துநிற்கும் சிங்கப்பூர் மக்களின் துயரத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். வரலாற்றில் ஒரு மாமனிதர் லீ. மக்கள் நலனுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர். உலகநாடுகளில் சிங்கப்பூரின் இன்றைய சிறப்புக்குகாரணமானவர்.


ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கிமூன்: 

ஆசிய அரசியல் வரலாற்றில் உயரிய இடம் வகிப்பவர் லீ. சிங்கப்பூரை உருவாக்கி 50 ஆண்டுகளாகும் இந்தநேரத்தில் அவர் பிரிந்தது வருத்தம்அளிக்கிறது.

இவ்வாறு தலைவர்கள் லீக்கு புகழாரம் சூட்டிஉள்ளனர்.



சிங்கப்பூர் சிற்பியின் முதன்மையான முத்துக்கள்

சிங்கப்பூர் என்ற தேசத்தை செதுக்கிய சிற்பியான 'லீ க்வான் யூ' பாபாக்கள் என்று அழைக்கப்படும் சீனப் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். வாழ்ந்து கெட்ட குடும்பத்தை லீயின் அம்மாதான் தூக்கி நிறுத்தினார்.

சிறு வயதில் லீ க்வான் யூவுக்கு இங்கிலாந்து மீது ஈர்ப்பு அதிகம். முதல் உலகப் போரில் ஜப்பான், இங்கிலாந்தை பந்தாடியபோது அந்த ஈர்ப்பு அவருக்கு போய்விட்டது. அதுவே பின்னாளில் அவரது இங்கிலாந்து எதிர்ப்புக் கொள்கையாக மாறியது.

உலகில் அதிக ஆண்டு காலம் ஜனநாயக அரசு ஒன்றின் பிரதமராக இருந்தவர் லீ. டோயின்பீயின் சிந்தனைகளால் கவரப்பட்டவர். 'கற்பனைத்திறன் கொண்ட சிறுபான்மையினரே நாட்டை செதுக்குவார்கள்' என்ற அவரது கருத்தில் நம்பிக்கை கொண்டவர்.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை காந்திக்கு எவ்வளவு வருத்தத்தைக் கொடுத்ததோ லீக்கு அந்த அளவு வருத்தம் கொடுத்தது மலேசியா - சிங்கப்பூர் பிரிவினை. இயற்கை வளங்கள் இல்லாத சிங்கப்பூரை மலேசியர்கள் சிலர் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அந்த கோபமே லீயின் வைராக்கியமாக மாறி சிங்கப்பூரை வளர்ச்சி பெறச் செய்தது.

அடியாத மாடு படியாது' என்பதில் நம்பிக்கை கொண்டவர் லீ. ''பள்ளியில் படிக்கும்போது நான் தவறு செய்தால் ஆசிரியர்கள் பிரம்பால் விளாசுவார்கள். அதுவே என்னை ஒழுக்கமாக மாற்றியது. அதனால்தான் தவறு செய்வோருக்கு பிரம்படி கொடுக்கும் தண்டனை அமல்படுத்தினேன்'' என்பார்.

விளையாட்டு பொழுதுபோக்கு பிரியர் லீ. கோல்ப் நடனம் நீச்சல் அவருக்கு பிடித்தமானவை. சிகரெட் பீர் பழக்கம் இருப்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டவர். ஒரு கட்டத்தில் தொப்பை போடுவதால் பீரை நிறுத்தினார். புகைப்பதால் மக்கள் ஓட்டுப்போட யோசிக்கிறார்கள் என்று உளவுத்துறை சொன்னபோது அதையும் நிறுத்தினார்.

லீயை பொறுத்தவரை புனைவு நூல்கள் குப்பை. அவரே பல நூல்கள் எழுதியிருக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் டாம் கிளான்சி.

இன்றைய அரசியல்வாதிகள் லீயிடம் கற்கவேண்டியதில் முக்கியமானது மதச்சார்பின்மை. 'அரசியல்இ பொருளாதாரம் பற்றி ஏதேனும் சொல்ல வேண்டுமானால் உங்கள் மத அங்கிகளை கழற்றிவிட்டு வாருங்கள்'' என்பார் லீ.

அவரது ஆட்சியில் கேள்விகள் கேட்ட எதிர்க்கட்சியினர் பத்திரிக்கையாளர்கள் மனித உரிமையாளர்கள் சிறையில் தள்ளப்பட்டனர். ஊழல்இ வறுமை உள்நாட்டு குழப்பம் என்று சிக்கலாக இருந்த சூழலில் நாட்டை முன்னேற்ற தனக்கு வேறு வழி இல்லை என்றார் லீ.

தன்னைப் பற்றிய சர்ச்சைகளை பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார். படித்தவர்கள்இ படித்தவர்களையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற அவரது கொள்கை மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியது. மனித அறிவு வளர்ச்சிக்கும் மரபணுக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கருதிய லீ அவ்வாறு அறிவித்தார்.


உலகத்தலைவர்களில் ஒப்பற்ற தலைவராக நிமிர்ந்து நிற்கும் சிங்ப்பூரின் பிதா மகனை இழந்து தவிக்கும் மக்களின் துயர்களில் எங்களின் கைகளும் நீழ்கின்ற அதேவேளை ஆழ்ந்த அஞ்சலிகளை நாங்களும் பகிர்ந்து கொள்கின்றோம்.


======CASTRO RAHUL======
278 Views

ஜெயம் ரவி, ஹன்சிகா நடிப்பிலும் இமான் இசையிலும் உருவாகி வரும் திரைப்படம் ரோமியோ ஜூலியட். படம் இப்பொழுதே பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு நீண்ட நாட்களுக்கு பின்பாக ஜெயம் ரவியின் படமும் வருகின்றது என்பதால் இன்னும் கூடுதலான வரவேற்பு படத்துக்கு உள்ளது.

இந்நிலையில், அண்மையில், இமான் இசையில் அனிருத் பாடிய டண்டணக்கா படால் இரசிகர்களின் அமோக ஆதரவோடு இணையத்தில் புகுந்தது. அதிலும், தன்காமாரிக்கு போட்டியான பாடலாகவே இந்தப்பாடலும் உருவாக்கப்பட்டிருந்தது.
                                         
               இந்தப் பாடலில், முக்கிய சிறப்பு என்னவென்றால் நடிகர் இயக்குனர் பாடகறேன் பல வகிபாவங்களைக் கொண்ட டி.ராஜேந்தர் தனது   படங்களில் பயன்படுத்தும் டண்டனக்கா எனும் வார்த்தையையே இவர்கள் பாடலாக ஆரம்பித்திருந்தார்கள்.

இந்தப் பாடலில் தன்னை அவமதிப்பதாக, டி.ராஜேந்தர் கருதியுள்ளதால் படத்தின் மீதும் பாடல் மீதும் அவமதிப்பு வழக்கு தொடரவுள்ளதாக ராஜேந்தர் முடிவு செய்துள்ளார். ஆக, பாடலுக்கும் படக் குழுவுக்கும் டண்டனக்கா தான் என்பது தெளிவாகத் தெரிகிறது.

-கோடம்பாக்கக் குருவி-
348 Views
கும்கி பிரபு சாலமன் மூலமாக தமிழுக்கு கொண்டுவரப்பட்ட கேரளத்து கிளி நடிகை லட்சுமி மேனன். கும்கியில் நல்ல பெயரையும் பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் அடுத்தடுத்து, பல முன்னணி நாயகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார் அம்மணி.

இடையில், நான் சினிமாவுக்கு முழுக்கு போடுகிறேன் எனவும், ஆபாசப் படங்களில் இவர்தான் என்று ஒரு பெரிய வதந்தியும் கிளம்பியது. அது நானில்லை என மறுத்தார். பின்னர் நான் பரீட்சைக்கு தயாராகி வருகிறேன் என்றார். இப்பொழுது தான் அது உண்மை என புலப்படுகிறது.

அம்மணி, பெங்களூர் தனியார் கல்வி நிறுவனத்தில் பரீட்சை எழுதி வருகிறார். எதிர்வரும் ஏப்ரல் 05ஆம் திகதி பரீட்சை நிறைவடைய, மீண்டும் நடிக்க வந்து குதிக்கவுள்ளார் அம்மணி லட்சுமி மேனன்.
நல்லா படிங்க ஆத்தா !!

-கோடம்பாக்கக் குருவி-
354 Views
1978இல் கமல் ஜோடியாக ஸ்ரீதேவி நடிக்க, பாரதிராஜா இயக்க இசைஞானி இசையமைக்க வெளியான படம் தான் சிகப்பு ரோஜாக்கள். இந்தப் படம் வழமையான படங்கள் மத்தியில் வித்தியாசமான படமாக வந்து சேர்ந்தது.
கமலுக்கும் ஸ்ரீதேவிக்கும் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்த படமாக இடம் பிடித்தது அந்தப் படம்.

வழமையாக, நாயகர்கள் செய்யாத வில்லத்தனமான நடிப்பில் வந்தார் கமல். அதாவது, பெண்களை கொலை செய்து வக்கிரம் தீர்ப்பவராகவே இதில் கமல் நடித்திருந்தார்.

இப்பொழுது, மீண்டும் இந்த சிகப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகமாக எடுக்கப்படுகிறது. பாரதிராஜாவின் மகன், மனோஜ் இப்படத்தை எடுக்க ஆயத்தமாகி வருகிறார். இந்தப் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனவே, ஸ்ரீதேவிக்கு நல்ல அடையாளத்தை வழங்கிய இயக்குனர் பாரதிராஜாவுக்காக என்றாலும், ஸ்ரீதேவி இதில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-கோடம்பாக்கக் குருவி-
277 Views

என் அபிமான தலைவரை இழந்த நாள் எனக்கு கறுப்பு தினமாகும். சிங்கப்பூர் மக்களுக்கு என் ஆழந்த அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ க்வான் யூ நேற்று மரணமடைந்தார்.

ரஜினிகாந்துக்கு மிகப் பிடித்த தலைவர் லீ க்வான் யூதான்.

 

என் அபிமான தலைவரை இழந்த நாள் கறுப்பு தினம்!- நடிகர் ரஜினிகாந்த்

 

அவரைப் பற்றி தனது பல பேட்டிகளில் உயர்வாகப் பேசியுள்ளார் ரஜினி. மக்கள் மீது அக்கறை கொண்ட அவரைப் போன்ற சிறந்த தலைவர் இங்கு உருவானால், அவருடன் இணைந்து அரசியல் செய்வேன் என்று ரஜினி கூறியிருந்தார்.

நேற்று லீ க்வான் யூ மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தார் ரஜினி.

அதில், "என் அபிதான தலைவராகிய லீ க்வான் யூ மறைந்த இந்த நாள் உண்மையாகவே கறுப்பு தினம். சிங்கப்பூர் மக்களுக்கு என் அனுதாபங்கள். புதிய பாதை அமைத்துக் கொடுத்த அவரது மறைவு உண்மையான இழப்பு," என்று ரஜினி தெரிவித்துள்ளார்.


=======CASTRO RAHUL====== 
384 Views

இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளின் பிரகாரம் அதி கூடிய ஓட்டங்களைப் பெற்ற வீரராக இலங்கை அணியின் சங்கக்கார திகழ்கின்றார்.

அவர் இத்தொடரில் 7 இன்னிங்ஸ்களில் 541 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இத் தொடரிலிருந்து இலங்கை அணி வெளியேறியுள்ளதுடன் , சங்கக்கார சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.  எனினும் இப்பட்டியலில் சங்கக்கார தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளார்.

சங்கக்கார இத்தொடரில் 4 சதங்களைப் பெற்றதுடன் சாதனைகள் பலவற்றையும் நிலைநாட்டியிருந்தார்.

இத் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர்களின் பட்டியலில் 2 ஆவது இடத்தில் நியூசிலாந்து அணி வீர ர் மார்டின் கப்டில் உள்ளார்.

345 Views


நியூசீலந்து அணி தலைவருக்கு என்ன ஆச்சோ  தெரியல இப்பிடி அடம்பிடிக்கிறார் ..இன்று ஈடன் மைதானத்தில்  இடம்பெறும் தென் ஆபிரிக்க அணிக்கெதிரான போட்டியினை பார்வயிடுவதற்காய் அந்நாட்டு ரசிகர்கள் அலுவலகம் வருகை தர மாட்டார்கள் ...ஆனால் அவர்கள் ஈடன் மைதானத்தில் அரையிறுதி எனும் இலக்கினை கடக்கும் எமது பயணத்தில் எம்மோடு கரம் கோர்த்து இருப்பார்கள் ..எனவே இந்த பயணத்தில் நீங்களும் இணைந்திடுங்கள் ..உங்களுக்காகவும் அரங்கில் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் ...அங்கிருக்கும் எம் கொடிகள் தானாக அசையாது எனவே நீங்களும் வந்து எம் கொடிகளை அசைத்து ஆதரவு தாருங்கள் என்று தொழில் வழங்குநர்களுக்கு தமது ரசிகர்கள் சார்பாக ரொம்பவே குசும்பாக  மடல் வரைந்துள்ளார் கருப்புச்சட்டை காப்டன் பிரெண்டன் மக்கலம்
#என்ன ஒரு வில்லத்தனம்

(நியூசீலந்து அணியினரை பொறுத்தவரையில் இப் போட்டி வரலாற்றில் மிக முக்கியமானதோர் போட்டி எனவே இப்போட்டியில் வெல்வதற்காய்  இத்தகைய யுக்திகளை அவர்கள் கடைப்பிடிகின்றமையும் குறிப்பிடத்தக்கது)


844 Views
அண்ணளவாக இன்றும் தமிழ் சினிமாவிலும், தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் நின்று பிடிக்கும் ஒரு நடிகர் ஷாம் எனலாம். அனதவுக்கு 15 வருடங்களாக பற்றிக்கொண்டிருக்கிறார். சரியான இடம் தமிழில் அமையவில்லை என்றாலும், அவருக்கான இடம் தெலுங்கிலும் கன்னடத்திலும் உண்டு.

இந்நிலையில், தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்துள்ள ஷாம், முதன் முறையாக மலையாளத்தில் நடிக்கவுள்ளார். இயக்குனர் அணில் ராதாகிருஷ்ணன் மேனன் இயக்கும் ''லார்ட் லிவிங்க்ஷ்டன் 700 கண்டி'' எனும் படத்தின் மூலமாய் மலையாளக் கனவை நிஜமாக்குகிறார் ஷாம்.

-கோடம்பாக்கக் குருவி-
294 Views

ஜோதிகா ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை கலக்கிய பெயர்தான்,ஒரு நிமிடத்துக்குள் இவர் திரையில் காட்டும் ஓராயிரம் முகபாவனைகளுக்கு .ரசிகர்கள் பலர் அடிமையானது உண்மைதான் !

சூர்யாவோடு திருமணம் பின் நடிப்புக்கு முழுக்கு . இரண்டு பிள்ளைகள் அழகிய குடும்பம் ஒதுங்கியிருந்த இவர், மீண்டும் .என்ற மலையாள வெற்றிப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் . தமிழில் படத்தின் பெயர் 36 வயதினிலே. இதை சூர்யா தன் சொந்த தயாரிப்பு நிறுவனத்தினூடு தயாரிக்கிறார் மலையாளத்தில் இயக்கிய இயக்குனரே தமிழிலும் இயக்குகிறார்.

திருமணத்திற்கு பின்னரான ஜோதிகாவின் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு எக்கச்சக்கம். மனைவியின் படத்தை எப்படியாவது வெற்றிப்படமாக ஆக்கிவிட வேண்டும் என்று இப்பொழுதே அயராது உழைகிறாராம் இந்த அன்புக்கணவர் சூர்யா. அத்தோடு படத்தை எப்படியாவது நூறு நாட்கள் ஒட்டிவிட வேண்டும் என்பதும் சூர்யாவின் திட்டமாக அமைந்துள்ளது.

எனவே, ஜோதிகாவின் மீள் வருகையினால் நம்மை விட சூர்யா அதிகம் மகிழ்ச்சி கொண்டுள்ளார் என்பது புரிகிறது. ஆக ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பது உண்மைதான்!!

-கந்தப்பன் பிரஷாந்த்-
599 Views
நல்லது செய்தாலும் சரி, தப்பு பண்ணினாலும் சரி ! அணிருத்துக்கு அடிக்கடி ஏதாவது நடந்துகொண்டேயிருக்கிறது. அண்மையில் இவரது இசையில் வந்த பாடல்களும் ஹிட், இவர் பாடிய பாடல்களும் செம்ம ஹிட். நல்ல பெயரும் புகழும் தமிழ் சினிமாவிலும் இரசிகர்களிடமும் அணிருத்துக்கு உண்டு.

இதனால், தெலுங்குப் படவுலகிலும் இவரை அறிமுகம் செய்ய எண்ணினார்கள். இதனால், ராம்சரண் தேஜா நடிக்கும் புதுப் படத்தில், அனிருத்தை ஒப்பந்தம் செய்தார்கள். ஆனாலும், அனிருத் தமக்கு இன்னும் முழுமையாக இசையமைத்து தரவில்லை என படக்குழு நாயகன் இயக்குனர் ஆகியோர் இணைந்து முணுமுணுத்த விஷயம், அனிருத் காதுக்கு எட்டி விட்டது.

உடனே, மறுபேச்சின்றி நான் படத்திலிருந்து விலகுகிறேன். எனக்கு தெலுங்கில் தான் இசையமைத்து பிழைப்பு நடத்த வேண்டும் என்னும் நோக்கம் மற்றும் தேவை இல்லையென கூறியவர், உடனடியாக படத்திலிருந்து விலகி விட்டார்.

மௌனம் காத்து வந்த படக்க்குளுவும், அனிருத்துக்குப் பதிலாக, தமனிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளது. அங்கிருந்து ஆவேசமாக வந்தவர், அஜித்தின் அடுத்த படத்தின் இசைப்பணியை செய்து காட்டுகிறேன் எனும் சபதத்தோடு ஆரம்பித்துள்ளார்.
இப்பிடி இருக்கணும் கண்ணு !!

-கோடம்பாக்கக் குருவி-
296 Views
[1]      «      1712   |   1713   |   1714      »      [1754]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top