Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

தல அஜித் நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் உங்களுக்கு தெரியும் என்னை அறிந்தால் என்பது. வழமையை விட அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட படம் இந்தப் படம். அத்தோடு, வெளியீட்டுத் திகதிகளும் பல மாற்றி மாற்றி இன்று தான் திரை கண்டது என்னை அறிந்தால்.

      பலரும் புகழ்ந்து பிரம்மாண்டமாக படத்தை கொண்டாடிவரும் நிலையில், அடிப்படையில் தல இரசிகரான நம்ம சிம்புவும் முதல் படக்காட்சியாக படத்தை அனிருத்துடன் சென்று பார்த்துவிட்டு, தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பகிர்ந்தார். வழமையாகவே, சிம்பு சொல்ல வரும் விஷயங்கள் சிக்கலைக் கிளப்புவது தெரியும். இந்தமுறையும் அதேகதையாகி விட்டது இவரது ட்விட்டர் பகிர்வு.

''நிறைய நாட்களுக்கு அப்புறமாக ஒரு நல்ல தரமான படத்தை பார்த்ததான உணர்வு. தல அழகாகவும் அதிரடியாகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மாஸாகவும் பெஸ்ட் கிளாசாகவும் படம் அமைந்திருக்கிறது என்னை அறிந்தால். இந்தப் படத்தை மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர மற்றைய அனைவரும் பார்த்து மகிழ்வார்கள்'' இதுதான் சிம்பு தன் ட்விட்டர் பக்கத்தில் கொறித்த பதிவு.
இது போதாதா நம்மாட்களுக்கு?
       எப்படி ஒரு படத்துக்காக மனநிலை பாதிக்கப்பட்டவர்களை இதனுள் இழுத்து, அவர்களின் மனம் நோகும்படி பேசலாம் சிம்பு என்று, ஒரு தரப்பு கொந்தளித்துள்ளது. உளநிலை சரியில்லாதவர்களை பாதிக்குமளவுக்கு எப்படி இவர்  பேச முடியும் என, சில இந்திய சமூக சேவைகள் அமைப்புக்கள் சிம்புவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன. இதற்க்கு சிம்பு தரப்பிலிருந்து எந்தவிதமான பதில்களும் வரவில்லை. இன்னும் என்னென்ன சிக்கல்களை சிம்பு சந்திக்கவுள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். -

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
406 Views
தமிழில் வந்தார் நடித்தார் சென்றார் என்றது போல பாவனாவின் வருகையும் முடிவும் அமைந்து விட்டது. அழகான நடிகை, நடிக்கத் தெரிந்தவர் என்று நல்ல அம்சங்கள் பல இருந்தும் பாவனாவை தமிழ் சினி உலகம் ஓரங்கட்டியது யார் தப்போ?

தமிழ் இந்த பட்சி ''சித்திரம் பேசுதடியில்'' தான் அறிமுகமானது என்பது நமக்கு தெரியும். ஆனாலும், மலையாளத்தில் அதற்க்கு முதலே 20 படங்களில் நடித்து பட்டையைக் கிளப்பிவிட்டுத் தான் இங்கு வந்திருக்கிறது இந்த மலையாள மங்கை.
வாய்ப்பில்லாமல், அல்லாடுகிறார் பாவனா என்றெல்லாம் பல கதைகள் வந்தன. ஆனாலும், நானா அப்பிடி? என்கிற அளவில் பாவனாவின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.

அதாவது மலையாள கன்னட படங்களில் இப்பொழுதும் முன்னணியாக நடித்து வரும் பாவனா, மலையாளத்தில் இயக்குனராக வர விரும்பும் ஒரு இளைஞருக்காக தானே அவரது குறும்படத்தில் நடித்துக் கொடுக்க முன்வந்துள்ளார். 3 கதைகளைக் கொண்ட கருவில் அமையும் கதையாகவே இந்த குறும்படம் அமைந்துள்ளது. நானே நடிக்கிறேன் என, அந்த வாலிபருக்கு பச்சைக் கொடி காட்டியிருக்கிறார் பாவனா.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி- 
343 Views

த்ரிஷாவின் திருமணத்தின் பின்னர் அவர் நடிக்க மாட்டார் என்று, ஆருடம் சொல்லி வந்தவர்களுக்கு அம்மணியின் புதிய பட அறிவிப்பு வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது.

அடுத்தவனையே அடிக்கடி நோட்டமிட்டு பழகிப்போன நம்ம மனதை, மாற்ற முடியாமல் பலர் அவதிப்படும் வேளை, திருமணம் முடிந்ததும் த்ரிஷா இனி சினிமாவில் இல்லை என பலர் வாதிட்டு வரிந்து கட்டியிருந்தார்கள். இப்பொழுது என்னடாவென்றால், அத்தனையும் பொய்யென நிரூபித்துள்ளார் த்ரிஷா.

இமான் அண்ணாச்சி இசையமைக்க தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் போகி எனும்  படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் அம்மணி. இவரோடு, இன்னும் இரண்டு குச்சி ஐஸ்களும்  கலந்து கதகளி ஆட வைத்துள்ளார்கள். பூனம் பஜ்வா மற்றும் ஓவியா ஆகிய நாயகிகளோடும் இணைந்தே த்ரிஷா இந்தப் படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தை அன்றொருநாள் அருண்விஜய் மற்றும் மந்த்ராவை வைத்து ''ப்ரியம்'' படத்தை இயக்கிய பாண்டியன் இயக்குகிறார். பெண்களின் துணிச்சல் பேசம் கதையாக படமாகவுள்ளது போகி.

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
390 Views

குறிப்பிட்ட ஒரு கால கட்டத்தை தன் கரங்களுக்குள் வைத்திருந்த கலக்கல் கனவுக் கன்னி நடிகை ரம்பா. இவரது படங்களில் இவரது நடிப்புக்காகவும் கவர்ச்சிக்காகவும் தியேட்டர்களை நிறைத்தவர்கள் அதிகம். அந்தளவுக்கு இவர் பிரபலமாகவிருந்தார்.

அதாவது திருமணத்துக்கு முதல் இவரது ராஜ்ஜியம் பல மொழிகளில் இருந்தது எனலாம். அத்தனை மூத்த நடிகர்களுடனும் சரி, இளையவர்களோடும் சரி இணைந்து நடித்துள்ள பெருமை ரம்பாவுக்குமுண்டு.
         இதெல்லாம் நமக்கும் தெரியும் பிரச்சினைக்கு  வாய்யான்னு நீங்க சினப்பது புரிகிறது.
அதாவது, நம்ம ரம்பா வீட்டில் அவரது 4.5 கோடி மதிப்புள்ள நகைகள் களவு போயுள்ளன. கனடாவில் இலங்கைத் தமிழரான கணவரோடு வசித்துவரும் ரம்பாவுக்கு சென்னையிலும், ஹைதராபாத்திலும் வீடுகள் உண்டு. அதில், ஹைதராபாத் வீட்டில், ரம்பாவின் அண்ணன் குடும்பம் வசித்து வந்துள்ளனர். அவர்கள் இல்லாத சமயத்தில்தான் கொள்ளை இடம்பெற்றுள்ளதாகவும், கொள்ளையோடு தனது மனைவி பல்லவிக்கும் அவரது குடும்பத்துக்கும் தொடர்பு இருப்பதாக ரம்பாவின் அண்ணா புகார் அளித்துள்ளது இன்னும் பீதியைக் கிளப்பியுள்ளது.

ரம்பாவில், ஆரம்பத்தில் இருந்தே விருப்பம் இல்லாத பல்லவியின் குடும்பமும் பல்லவியும் தான் திட்டமிட்டு இதனை செய்திருக்கிறார்கள் என்று, ரம்பாவின் அண்ணன் தன் மனைவியின் மீதே பழியினை சுமத்தியிருப்பது இன்னும் பூதகரமாக பிரச்சனைகளை தோற்றுவித்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் யார் சம்மந்தப்படவ்ர்கள் என்று!

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
372 Views
தென்னிந்திய தமிழ் சினிமாவைப் பொறுத்தவரைக்கும் , சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபலமானவர்கள் ஒருசிலர்தான். விரல்விட்டு எண்ணி விடலாம்.
        இந்த வகையறாவில் வந்து நின்று பிடிக்கும் ஒருவர் சிவகார்த்திகேயன். அடுத்து, மிர்ச்சி செந்தில். இருவரும்தான் நாயகர்களாக வலம் வருகின்றவர்கள்.

இவர்களுக்கு அடுத்து இன்னொருவர் என்றால், அது நம்ம மா.கா.பா.ஆனந்த் மட்டுமே!
      வானவராயன் வல்லவராயன் மூலம் ஹீரோவாக அவதரித்தவர், பஞ்சுமிட்டாய் மற்றும் அட்டி ஆகிய படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார். நடிப்பில் தேர்ச்சி இருக்கின்றது என்பதால், மேலும் பல வாய்ப்புக்கள் இவரை தேடி வருகின்றன.
        இந்த வரிசையில், புதிதாகவும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் மா.கா.பா. '' தீபாவளி துப்பாக்கி '' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாகயுள்ளார். படப்பிடிப்புக்கள் ஆரம்பாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, கறுப்பானாலும் கலக்கலாம் என்பதற்கு மா.கா.பா.ஆனந்தும் உதாரணமாகி விட்டார்.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
367 Views
சி.சி.எல் 5 நட்சத்திர கிரிக்கெட் போட்டித்தொடரின் இறுதிப் போட்டி ஹைதராபாத்தில் கடந்த தினம் நடைபெற்றது. போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றினார்கள்.

வெற்றிக்கு பின்னர் நட்சத்திர விருந்தகத்தில், நடிகர் நடிகைகளுக்கு பெரிய  விழா நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படிருக்க, அனைத்து நடிக நடிகைகளும் கலந்துகொள்ள வந்திருந்தார்கள். இதற்காக நடிகை ஷார்மியும் வந்திருந்தார்.

வந்திருந்த ஷார்மியுடன், ஒரு புகைப்படம் எடுக்க வேண்டுமென இளைஞர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ஷார்மியும் சம்மதித்து போஸ் கொடுத்துள்ளார். சற்றும் அம்மணி எதிர்பார்க்காத நேரத்தில், அவரது இடுப்பை கிள்ளியுள்ளார் அந்த வாலிபர்.            ஷார்மி தடுமாறிப் போக, அங்கிருந்தவர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வாலிபரை வாட்டி எடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இறுதியில், ஷார்மி ஒரு முடிவுக்கு வந்துள்ளார். அதாவது, இனி தனது பாதுகாப்புக்காக இரண்டு காவலர்களை நியமிக்க வேண்டும் என்பதே அந்த முடிவு.

-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
340 Views
நட்சத்திர நாயகி த்ரிஷாவுக்கும் தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளர் வருண் மணியனுக்கும் கடந்த 23ஆம் திகதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. யாரும் எதிர்பார்க்கவில்லை, த்ரிஷா தன்  மணமகனை இவ்வளவு சீக்கிரமாய் தெரிவு செய்துகொள்வார் என்று!
   
  ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணியின் தூதராக த்ரிஷா  இருந்த போது, சென்னை அணியை தாமே வாங்க ஆசைப்பட்டதாகவும், அவரும் அதை வாங்க முற்பட்டதாகவும் தகவல்கள் பரவியது. பின்னர் வருண் மணியன் இது பொய்யான தகவலென மறுத்து விட்டார்.

இந்நிலையில், சென்னை அணியை வாங்க முற்பட்டால் வீணாக விபரீத விளைவுகளை வருண் சந்திக்க நேருமெனவும்  இன்னும் பல மிரட்டல்களும் இனந்தெரியாத தொலைபேசி அழைப்புக்களின் மூலம் தனக்கு வருவதாக வருணும் த்ரிஷாவும் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

சம்மந்தமில்லாமல், தமக்கு  கொலை மிரட்டல் விடுக்கின்றவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென  பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர். அத்தோடு தன் எதிர்கால கணவர் மீதான இந்த கொலை மிரட்டல் தொடர்பாக த்ரிஷா அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-
423 Views

குப்பி, காவலர் குடியிருப்பு, வனயுத்தம் போன்ற படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர் ரமேஷ், இப்பொழுது இன்னுமொரு படத்தை இயக்க ஆரம்பித்திருக்கிறார்.
தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் இந்தப் படம் தயாராகிறது. படத்துக்கு கன்னடத்தில் ''கேம்'' என பெயரிட்டுள்ளார்கள். தமிழுக்கு பெயர் இன்னும் சூட்டவில்லை.

தமிழிலும் கன்னடத்திலும் பழகிய முகங்கள் என்பதால் அர்ஜுன் மற்றும் ஷாமை இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார். அத்தோடு இந்தப்படம் தனிப்பட்ட ஒருவருடைய வாழ்க்கையை வெளிகாட்டும் விம்பமாக அமையாது என்றும், ஒரு உண்மைச் சம்மபவத்தை தொட்டுப் போகும் கதையாகவே அமையுமெனவும் திரைக்கதை பற்றி கிலாகிக்கிறார் இயக்குனர் ஏ.எம்.ஆர் ரமேஷ்.

இவ்வாறு வரும் படத்தில், முக்கியமான பாத்திரத்தில் இந்தி நடிகை ஒருவரை நடிக்க வைக்கவும் ஏற்பாடுகள் மேட்கொள்ளப்பாடு வருகின்றது. அத்தோடு கதாநாயகி மற்றும் ஏனைய கலைஞர்கள் பற்றி தகவல்கள் வெளியிடப்படவில்லை.
                யாராலும் ஊகித்து உணர முடியாத படத்தையே கொடுக்கப் போக்கினேன கதையை பக்காவாக தயார் செய்து இரு மொழிகளிலும் களமிறங்கியுள்ளார் இயக்குனர் என்பது பாராட்டத்தக்கது.

-கொண்டு வந்தது கோடம்பாக்கக் குருவி-
370 Views
கவர்ச்சியை தமிழுக்கு குறைத்தும், தெலுங்கில் அள்ளி விதைத்தும் உலா வருகின்றவர் அஞ்சலி. சர்ச்சைகளின் தலைவி என்கிற அளவில் அம்மணிக்கும் பிரச்சினைகளுக்கும் அவ்வளவு பொருத்தம்.
      அடிக்கடி ஏதாவது செய்து மாட்டிக் கொள்வது அல்லது கிசுகிசுக்கப்படுவது வழமையானதாக மாறிவிட்டது. சரி ! இப்பொழுது அஞ்சலி, தனக்கு வரும் தேவையற்ற நெருக்கடிகள் பிரச்சினைகளுக்கு தீர்வை தானே தருவதற்காக ஒரு முடிவுக்கு வந்து, பொது வலைத்தளப் பகுதிக்கு வந்துள்ளார்.

அதாவது ட்விட்டர் வலைத்தளத்துக்கு அம்மணியும் அடியெடுத்து வைத்துள்ளார். யாராவது தன்னைப் பற்றி வதந்திகள் மற்றும் தவறான செய்திகளை பரப்பினால், அது தொடர்பாக தானே தன்னிலை விளக்கம் தருவதற்காகவே இந்த ட்விட்டர் தரிசனம் என அஞ்சலி அறிக்கை ஒன்றோடுதான் வந்துள்ளார்.

தனது கணக்கில், தன் புகைப்படங்கள் மற்றும் தனது நடிப்பில் வெளியாகும் படங்கள் பற்றிய குறிப்புக்களையும் இட ஆரம்பித்துள்ளார் இந்த அங்காடித்தெரு அஞ்சலி பாப்பா.

கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி -
359 Views


சிம்புவின் வேட்டை மன்னன் படத்தில் ஜெய்யையும் தன்னுடன் இணைந்து நடிக்க வைத்தார் சிம்பு. படம் இன்னும் வெளியாகவில்லை. பல சிக்கல்களோடு கிடப்பிலே தூசோடு கிடக்கிறது.

அதை கணக்கிலெடுக்காமல் தனது ஏனைய படங்களில் பிசியாகிய சிம்பு, இது நம்ம ஆளு படத்தில் ஆர்வமாக இறங்கிவிட்டார். அவரே நடிக்கும் படத்தில் அவரது தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அவதரிக்கிறார். நயன்தாராவுடனான காதல் முறிவுக்கும் சர்ச்சைகளுக்கும் பின்னர், நாயனோடு அன்றியாவும் இணைந்து இந்தப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

படத்தில், ஒரு சிறப்பு தோற்றப் பாத்திரம் வர, படத்தில் யாராவது முன்னணி நடிகரை நடிக்க வைத்தால் சிறப்பாக வருமென நினைத்த சிம்பு, தன வேட்டை மன்னனில் நடித்த ஜெய்க்கே அழைப்பை விடுத்திருக்கிறார். அவரும் நட்புப் பாராட்டி, இது நம்ம ஆளுவில் இணைந்திருக்கிறார்.

கொண்டுவந்தது கோடம்பாக்க் குருவி-
374 Views
கன்னட முக்கிய முன்னணி நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் வளர்ந்துவரும் படம் வஜ்ராகயா. இன்டஹ்ப்படம் மிக வேகமாகவும் சிறப்பாகவும் எடுக்கப்பட்டு வருகிறது.

சரி, கன்னடத்தை எதுக்கைய்யா நம்மகூட பேசுறீங்கன்னு நீங்க முழிக்கிறது புரியுதுங்க. விஷயம் இனித்தான் இருக்கு. அதாவது இந்த கன்னட படத்தில் நம்ம ஹீரோ தனுஷ் ஒரு பாடலைப் பாடிக் கொடுத்துள்ளார்.
அடடா... அப்படியான்னு பார்க்கிறீங்களா? இன்னும் இருக்கு மேட்டர்.

இந்தப் படத்தில் உள்ள இன்னொரு சிறப்பு என்னன்னா.. இப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் மலையாள முன்னணி நடிகர் திலீப்குமார் மற்றும் தெலுங்கின் இளம் நாயகன் ரவி தேஜா, தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவராக வலம் வரும் சிவகார்த்திகேயனும் இணைந்து நடனமாட உள்ளார்கள்.

தமிழ், ஹிந்தி என பிரபலமான தனுஷ் இதன்மூலமாக கன்னடத்திலும் கால்பதித்துள்ளார். இந்த திறமைகள் இன்னும் உச்சம் பெற வாழ்த்துக்கள் சொல்லிவிடுவோம்.

கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி- 
457 Views
அழகியல் அப்பிய கிராமத்து கதைகளையும், இரசிக்க வைக்கும் ஜனரஞ்சக ஜீவிப்புக்களையும் திரையிலே கதையாக வடித்து உயிர்கொடுத்து அசத்தும் அற்புத இயக்குனர் என்ற அடைமொழியோடு தமிழில் வலம்வரும் இயக்குனர் பிரபு சாலமன்.
இப்பொழுது முன்னணியில் இருக்கும் அத்தனை நட்சத்திரங்களும் இவரது இயக்கத்தில் நடித்துவிட விரும்புகின்றவர்கள்தான். மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
யதார்த்தம் சொல்லும் கதைகளை திரையில் கொடுக்கும் மன்னனான பிரபு சாலமன், கயல் படத்தைத் தொடர்ந்து தன் புதிய பட பணிகளை ஆரம்பித்து விட்டார்.
பல படங்களில் புதிய புதிய தோற்றங்களில் வந்து நல்ல நடிப்பை வெளிப்படுத்தும் தனுஷை தனது அடுத்த படத்தின் நாயகனாக தெரிவு செய்திருக்கிறார். ஏனைய கலைஞர்கள் தெரிவு நடைபெற்று வரும் நிலையில், இசை மட்டும் பிரபு சாலமோனின் ஆஸ்தான இசையமைப்பாளர் இமான்!
தனுஷின் அனேகன், ஷமிதாப் ஆகியன வெளியீட்டுக்கு தயாராகவுள்ள நிலையில், காஜலோடு இணைந்து நடிக்கும் மாரியும்  வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தப் படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு தனுஷ் பிரபு கூட்டணி இணைந்து களத்தில் குதிக்கப் போகிறது.
இந்தத் திரைப்படத்தில், நாயகி யாரென இன்னும் தெரியவில்லை. , நமது அம்மணிகள் பலரும் முண்டியடித்தாலும், அதிகமாக இயக்குனர் புதியவர்களை கொண்டுவந்தே தமிழ் சினிமாவுக்கு தாரை வார்த்துக் கொடுப்பது வழக்கம். இப்படத்தில் யாரோ?
முடியுமென்றால் நம்ம பொண்ணுங்களும் முயற்சிக்கலாம்.

-கொண்டு வந்தது கோடம்பாக்க குருவி-


351 Views
நடிகர் ரகுமானோடு சங்கமம் படத்தில் அறிமுகமானவர் நடிகை விந்தியா. அதன் பின்னர் மேலும் சில படங்களில் நாயாகியாகவும் துணை வேடங்கள் சிறப்புத் தோற்றங்களிலும் நடித்து வந்தார்.
    சில பாடல்களுக்காக குத்து நாயகியாகவும் களமிறங்கி இருந்தவர் இவர்.

2008இல் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவருக்கும் துணைவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டையடுத்து இருவரும் விவாகரத்துப் பெற்றுக் கொண்டனர். விந்தியா, விவாகரத்தின் பின்னர் மீண்டும்திரையில் தோன்றத் தொடங்கினார்.
      அத்தோடு உபதொழிலாக, அரசியலிலும் இறங்கி பிரசாரம் மற்றும் ஏனைய கட்சி தொடர்பான விடயங்களிலும் கலந்து வந்தார்.
இப்படியாக அண்மையில், வாரணாசி சென்று வந்த விந்தியாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி தலை வலி, மயக்கம் என்பவற்றோடு இறுதியில் மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.

     இதன் காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் இப்பொழுது அனுமதிக்கப்பட்டுள்ளார் விந்தியா. அவரது கணையம் பாதிக்கபட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்றுச் செல்லும்படி ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது.

 -கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-

 
362 Views
இளையதளபதி விஜய் கடும் கோபத்தில் - 'தல'யின் "என்னை அறிந்தால்" காரணம்......???

பொங்கலன்று திரையரங்குகளில் பொங்கவிருந்த 'தல'அஜித்தின் "என்னை அறிந்தால்" திரைப்படம், நாளை 29-ம் திகதி ரசிகர்களின் மனங்களை சந்தோசத்தில் பொங்க வைக்கும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் நாளையும் படம் வெளியாகவில்லை. எதிர்வரும் 5-ம் திகதியே "என்னை அறிந்தால்" தன்னை அறியவைக்கும் என மறுபடியும் அறிவித்திருக்கிறார்கள் 'தல'அஜித் உட்பட்ட படக்குழுவினர்.

நாளை வெளியாவதாக இருந்த இந்த "என்னை அறிந்தால்" திரைப்படம், வெளியாவதற்கான அனைத்து வேலைகளும் நிறைவு செய்யப்பட்டு, படம் திரைப்படத் தணிக்கைக்குழுவினரின் பார்வைக்கும் அனுப்பப்பட்டது. இவ்வாறு அனுப்பப்பட்ட படம் வெளியாவதற்கான சிக்கலும், இங்கே தான் ஆரம்பித்ததாம். U சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்த்து அனுப்பப்பட்ட இந்தப்படத்திற்கு U/A  சான்றிதழ் தான் கிடைத்துள்ளதாம்.

 மறுபடியும் திரைப்படத் தணிக்கைப்பிரிவின் மீள்பார்வைக்குழுவிற்கு "என்னை அறிந்தால்" திரைப்படத்தின் பிரதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில்,இன்றைய தினம் படத்தை மறுபடியும் பார்த்து, படத்தின் சான்றிதழுக்கான மீள்முடிவை எடுக்கவுள்ளனர் தணிக்கைக் குழுவினர். அதனால் எதிர்வரும் 5-ம் திகதி "என்னை அறிந்தால்" கண்டிப்பாக வெளியாகுமென உறுதியாக சொல்கிறார்கள் படத்தின் தயாரிப்புப் பிரிவினர்.

                

இது இவ்வாறிருக்க, "என்னை அறிந்தால்" படம் காரணமாக  இயக்குனர் அட்லீக்கும் நம்ம இளையதளபதி விஜய்க்கும் இடையே முறுகல்நிலை தோன்றியிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கின்றன. இந்த முறுகல்நிலையானது மிகவும் பரதூரமானதென கோடம்பாக்க தகவல்கள் சொல்கின்றனவாம்.

இளையதளபதி விஜய்ஜை வைத்து இயக்குனர் அட்லீ ஒரு படத்தை இயக்குவதாக இருந்தது. இந்தநிலையில் விஜய்யிடம் கதை சொல்லப்பட்டு விஜய் அந்தக்கதையில் நடிப்பதாக ஒப்புக்கொண்டதாகவும் சொல்லப்படுகின்றது. இந்தநிலையில்  "என்னை அறிந்தால்" படத்தின் கதை அரசல் புரசலாக வெளியாகிய நிலையில், விஜய்யை வைத்து அட்லீ இயக்கவிருக்கும் புதிய படத்தின் கதை "என்னை அறிந்தால்" கதையை மிகவும் ஒத்துப்போவதாக இருந்ததாக சொல்லப்படுகின்றது. இதன் காரணமாக அட்லீயிடம், விஜய் ரொம்பவே கோபமாக இருப்பதாக சொல்லப்படுகின்றது.

இந்தநிலையில், வெளியாகவிருக்கும் "என்னை அறிந்தால்" படத்தை முதல் காட்சிக்கே சென்று பார்த்துவிட்டு வருமாறும், அவ்வாறு இரண்டு கதைகளும் வேறு வேறு என்றால் தன்னிடம் வந்து சொல்லுமாறு கூறியிருக்கிறார் விஜய். அது மட்டுமல்லாமல் கதைகள் ஒத்துப்போகுமாக இருந்தால் வேறு கதையோடு வருவதென்றால் மட்டும் , தன்னை வந்து சந்திக்குமாறும் இளையதளபதி உத்தரவு போட்டிருக்கிறாராம். அதேவேளை, நாம் இன்னும் படத்தை ஆரம்பிக்கவே இல்லையே, அதற்குள்ளாகவே கதையில் பிரச்சனையா...? என ரொம்பவே குழப்பத்திற்கும் ஆளாகியுள்ளாராம் விஜய்.

                      

இது ஒருபுறம் இருக்க, இன்னொரு பக்கம் நம்ம சூப்பர்ஸ்டார் மாப்பிள்ளை தனுஷ் தன்னுடைய "காக்கி சட்டை"யை கழட்டவும் "என்னை அறிந்தால்" காரணமாகியிருப்பதாகவும் கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது. இந்த இரண்டு படத்தின் கதையும் ஒன்றுதான் என வெளிவந்த செய்தியை அடுத்து, இயக்குனர் கெளதம்மேனனை தொலைபேசியில் தொடர்புகொண்டு, "என்னை அறிந்தால்" படத்தின் கதை பற்றி பேசியிருக்கிறார் "காக்கிசட்டை" தயாரிப்பாளரான தனுஷ். அதற்குப் பின்னரான சில நாட்களில் வேறொரு பட நிறுவனத்திற்கு "காக்கிசட்டை" கைமாறியுள்ளதாகவும், இதன்மூலம் தனுஷ் தப்பிக்கொண்டுள்ளதாகவும் தென்னிந்திய தமிழ் சினிமாவின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் காதோடு காதாகக் கதை பேசுகின்றன.  
எது எப்படியோ, "என்னை அறிந்தால்" வருகைக்காக 'தல'அஜித் மட்டும் காத்திருக்கவில்லை. 'தளபதி' விஜய்யும், சுள்ளான் தனுஷும் கூட காத்திருக்கிறார்கள் என்பது தான் சுவாரஸ்யமான தகவல் என்கிறது கோடம்பாக்கம் பக்கமிருந்து வீசும் காற்று.....

பழமொழி: எள் காய்கிறது எண்ணைக்கு; "..........................”??????

*கணேசமூர்த்தி ராகவன்.

53,953 Views

த்ரிஷாவின் முன்னைய நாள் நண்பன் (அவருதான் சொல்ல சொன்னாங்க) என்று உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் தெலுங்கு நடிகர் ராணா, இப்பொழுதெல்லாம் தன் திருமணத்தைப் பற்றியும் வாழ்க்கை பற்றியும் நிறையவே பேசுகின்றார்.

காண்கின்ற அத்தனை பேரிடமும், என் நண்பர்களான அல்லு அர்ஜுன் மற்றும் ராம் சரண் தேஜா ஆகியோருக்கு தான் என் இரகசியங்களையும் வாழ்வில் நடந்த கசப்பான அனுபவங்களையும் சொல்லியிருக்கிறேன். அவர்களோடு மட்டும் தான் அதிகம் மனம் விட்டு பேசுவேன்.
இப்பொழுது அதனையும் குறைத்துக்
கொண்டேன். ஏனென்றால் அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. படப்பிடிப்பு முடிந்ததும் அவர்கள் தமது குடும்பத்தோடு காலம் கழிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தினால் பேசுவதையும் நிறுத்தி விட்டேன்.

இவர்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் தான் எனக்கும் திருமண வயது வந்து விட்டது தெரிகிறது. விரைவில் நானும் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளுவேன் என்கிறார் ஏமாந்து போன இந்த ராணா.
372 Views
[1]      «      1721   |   1722   |   1723      »      [1754]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top