தென்னிந்திய தமிழ் சினிமாவைப் பொறுத்தவரைக்கும் , சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து பிரபலமானவர்கள் ஒருசிலர்தான். விரல்விட்டு எண்ணி விடலாம்.
இந்த வகையறாவில் வந்து நின்று பிடிக்கும் ஒருவர் சிவகார்த்திகேயன். அடுத்து, மிர்ச்சி செந்தில். இருவரும்தான் நாயகர்களாக வலம் வருகின்றவர்கள்.
இவர்களுக்கு அடுத்து இன்னொருவர் என்றால், அது நம்ம மா.கா.பா.ஆனந்த் மட்டுமே!
வானவராயன் வல்லவராயன் மூலம் ஹீரோவாக அவதரித்தவர், பஞ்சுமிட்டாய் மற்றும் அட்டி ஆகிய படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார். நடிப்பில் தேர்ச்சி இருக்கின்றது என்பதால், மேலும் பல வாய்ப்புக்கள் இவரை தேடி வருகின்றன.
இந்த வரிசையில், புதிதாகவும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் மா.கா.பா. '' தீபாவளி துப்பாக்கி '' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாகயுள்ளார். படப்பிடிப்புக்கள் ஆரம்பாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, கறுப்பானாலும் கலக்கலாம் என்பதற்கு மா.கா.பா.ஆனந்தும் உதாரணமாகி விட்டார்.
-கொண்டுவந்தது கோடம்பாக்கக் குருவி-