Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

மிருகங்களிடத்தில் கருணை கொண்ட நடிகைகளில் நம்ம திரிஷாவும் இருக்காங்க அடிக்கடி பல நிகழ்வுகளில் பேசும் போதும் மிருக வதை சம்பந்தமாகவும் குரல் கொடுத்து வருவதை அவதானிக்கின்றோம்.

மிக விரைவில்  திருமணம் செய்யவுள்ள திரிஷாவுக்கு  சிறப்பு பரிசு ஒன்றை வழங்க காத்துக்கொண்டிருப்பதாக திரிஷாவை கரம் பிடிக்கும் வருண் மணியன் தெரிவித்துள்ளார்.

திரிஷாவுக்காக ஆயிரம் மிருகங்களுக்கு உணவளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பரிசானது ரோல்ஸ் ராய்ஸ் காரை விடவும் சிறந்த பரிசாக திரிஷா கருதுவார் என்று வருண் மணியன் குறிப்பிட்டுள்ளார்.
425 Views
அடுத்த சூப்பர் ஸ்டார் ...அஜித்???

எண்ணற்ற ரசிகர்களின் எதிர்பார்ப்போடு, எதிர்வரும் 29-ம் திகதி வெளியாகவிருக்கின்றது  தல அஜித்தின் என்னை அறிந்தால். உலகெங்கும் ஒரேநாளில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகி சாதனை படைக்கவிருக்கின்றது இந்தப்படம்.

ஹரிஷ் ஜெயராஜ் இசை வழங்க, இயக்குனர் கெளதம் மேனனின் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா ஆகியோர் நடிக்கும் இந்தப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆகியுள்ளன.

இந்தநிலையில், பாடல்கள் போலவே என்னை அறிந்தால் படமும் சூப்பர்ஹிட் ஆகவேண்டும் என்பதற்காக, சமய நம்பிக்கையின் அடிப்படையில் அமாவாசை தினமான நேற்று இந்தப்படத்தை திரைப்படத் தணிக்கை குழு(சென்சார்போர்ட்) இன்  பார்வைக்காக அனுப்பி வைத்துள்ளார்களாம் படக்குழுவினர். இவ்வாறு நேற்று அனுப்பி வைக்கப்பட்ட படத்தை தணிக்கைக் குழுவினர் நாளை பார்ப்பதோடு 'U' சான்றிதழ் வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பிலும்  "என்னை அறிந்தால்" படக்குழுவினர்.

இது இப்படியிருக்க, என்னை அறிந்தால் படத்தின் வியாபாரம் எதிர்பார்த்ததையும் விட பெருமெடுப்பில் சூடுபிடித்திருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலிருந்தும், விநியோகஸ்தர்கள் பக்கங்களிலிருந்தும் நம்பத்தகுந்த வகையில் செய்திகள் வெளியாகின்றன. இதனால் தான் உலகெங்கும் ஏராளமான திரையரங்குகளில் என்னை அறிந்தால் திரைப்படத்தை திரையிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் விஷயம் வெளியாகியுள்ளது.

தமிழ்சினிமாவைப் பொறுத்தவரையில் தற்போது, வெளிநாடுகளில் பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் தமிழ்சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களை திரையிட படக்குழுவினர் ஆர்வம் காட்டுகின்றார்கள். ஏனெனில், வெளியாகும் படங்களின் வசூல் சாதனையில் வெளிநாடுகளின் வசூல் தொகையும் பிரதான பங்கு வகிப்பதுதான் இதற்கான காரணம். அந்தவழியில் என்னை அறிந்தால் படமும் களமிறங்கியிருக்கின்றது என்கிறார்கள் விடயமறிந்த தரப்பினர்.

அந்தவகையில், இம்முறை பிரான்ஸ் நாட்டில் மட்டுமே 30 திரையரங்குகளில் வெளியாகவிருக்கின்றது 'தல'யின் "என்னை அறிந்தால்". இதுவரை பிரான்ஸ் நாட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் "லிங்கா" படம் மட்டுமே 53 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்திருந்ததாம். அதற்கு அடுத்தபடியாக தற்போது, 'தல'அஜித்தின் "என்னை அறிந்தால்" திரைப்படம் தான் 30 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அண்மையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரமின் "ஐ" படம் 23 திரையரங்குகளிலும்  விஜய்யின் "கத்தி" 24 தியேட்டர்களிலும்,  "ஜில்லா"  23 திரையரங்குகளிலும்,  'தல'அஜீத்தின் "வீரம்" 10 திரையரங்குகளிலும் வெளியாகியிருந்தது. அந்தவகையில் இளையதளபதி விஜய்யை பின்னுக்கு தள்ளிவிட்டு, "என்னை அறிந்தால்" திரைப்படத்தின் மூலம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு அடுத்த இடத்தை பிடித்திருக்கிறார் 'தல'அஜித்.
 
இந்த விஷயத்தை அறிந்த அஜித் ரசிகர்களோ, அடுத்த சூப்பர்ஸ்டார்  ஆகுவதற்கு எங்க 'தல' தான் பொருத்தமானவர் என மறுபடியும் இளையதளபதி ரசிகர்களை வம்புக்கு இழுக்க ஆரம்பித்திருப்பதாகவும் ஒரு கொசுறுத்தகவல் எங்கள் காதோரம் கிடைத்திருக்கிறது.

'தல'யா..? தளபதியா....? - வெளியாகட்டும் "என்னை அறிந்தால்"  

*கணேசமூர்த்தி ராகவன்.
628 Views

அபிசேக் பச்சன் மற்றும் நம்ம அசின் ஜோடியாக  நடித்துவரும் திரைப்படம்தான் ''ஆல் இஸ் வெல்'' . இப்படத்தின் படப்பிடிப்புக்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. தமிழில் வாய்ப்பில்லாத அசினும் மிகுந்த ஈடுபாட்டோடு இந்தப் படமாவது தனக்கு சரிந்த வாய்ப்புக்களை தூக்கி நிறுத்துமென ஆர்வத்தோடு நடித்து வந்தார்.

இவ்வாறு நடைபெற்று வந்த படப்பிடிப்புக்கள் திடீரென இரத்தாகி நிறுத்தப்பட்டதாக தகவல் கசிந்தது.
என்னாச்சும்மானு விசாரித்துப் பார்த்தால் விபரம் வேறுமாதிரி வந்தது.

அய்யராத்து நாட்டுக் கட்டையாய் வந்து கலக்கிய அழகு நடிகை அசின், இந்தப் படத்தில் எடை அதிகரித்துக் காணப்படுவதால், தொடர்ந்தும் அப்படியே காட்சிகளை எடுத்தால் அசின் இன்னும் அசிங்கமாக தெரிவார் . அதுமட்டுமிலாமல் அவரது மார்க்கெட்டும் சரிந்து போகுமென பயந்துதான் படத்தின் படப்பிடிப்புக்களை  இரத்து செய்து சிறிது நாட்களுக்கு அசினை உடலைக் குறைக்கும் முயற்சிகளில் ஈடுபடும்படி படக்குழு விடுப்பு கொடுத்துள்ளதாக தெரிகிறது.

ஆக மொத்தத்தில், அசினின் அதிகரித்த உடல் இடையே இந்த நிலைமைக்கு காரணமென தெரிகிறது.
#ஏம்மா இப்பிடி பண்றீங்க?

584 Views
உலக சினிமா வரலாற்றிலேயே இல்லாத வகையில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனைப் படைத்த இசைஞானி இளையராஜாவுக்கு மும்பையில் செவ்வாய்க்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. பொலிவூட்  சாதனையாளர் அமிதாப் பச்சன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன், நடிகை ஸ்ரீதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு இசைஞானிக்கு மரியாதை செய்தனர். 1976-ல் அன்னக்கிளி’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 40 ஆண்டுகளாக தொடர்ந்து இசைத் துறையில் யாரும் கற்பனை கூட செய்ய முடியாத அளவுக்கு சாதனைகள் படைத்து வருகிறார். இவரின் சாதனைக்கால பயணங்களில் 5 தேசிய விருதுகள், ஏராளமான மாநில அரசு விருதுகள், பத்ம பூஷன் விருது என பல பெருமைகளைப் பெற்றுள்ள ’மேஸ்ட்ரோ’ இளையராஜா, விரைவில் இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னாவுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.






உலக அளவில் இசைத் துறையில் இப்படி ஒரு சாதனையை எவரும் நிகழ்த்தியதில்லை. அதுவும் இளையராஜா இசையமைத்த 1000 க்கும் மேற்பட்ட படங்களில் 80 சதவீதம் பெரும் வெற்றி பெற்றவை. 4000 பாடல்களுக்கு மேல் சூப்பர் ஹிட் தரத்தை சேர்ந்தவை. இத்தனை பெருமைக்கும் சொந்தக்காரன் தான் இளையராஜா. அதேவேளை பாலா இயக்கும் ’தாரை தப்பட்டை’ படம் இளையராஜாவின் 1000வது படம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது. பரதேசி படத்தை தவிர பாலாவின் எல்லா படங்களுக்கும் இளையராஜாவே இசையமைத்துள்ளார்.

இது இவ்வாறு இருக்க இளையராஜாவுக்கு, பொலிவூட் திரையுலகம் நேற்று பாராட்டு விழா எடுத்தது. இயக்குநர் பால்கி இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள, நடிகர் அமிதாப் பச்சனே முன் நின்று அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பினார். அவரது அழைப்பை ஏற்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல் ஹாஸன், நடிகை ஸ்ரீதேவி என இந்தியாவின் மிக உன்னத கலைஞர்கள்.. சாதனையாளர்கள் இந்த விழாவில் பங்கேற்று, இசைஞானியின் பெரும் சாதனையைக் கௌரவித்து மகிழ்ந்தனர்.

இவ்விழாவில் அமிதாப் பேசியபோது : அவர் ஒரு ஜீனியஸ். என்னை பல வழிகளில் திருத்தியுள்ளார். எனக்கு அந்த வாய்பளித்ததற்கு நன்றி எனவும், அவருடைய பெயர் பல படங்களின் வியாபாரத்துக்கு உதவியிருக்கிறது. இசையுலகில் அவரது பெயர் கடவுளோடு ஒப்பிடப்படுகிறது" என்றும் கூறினர்.








 
 
கமல் பேசும் போது, இளையராஜா எனது வாழ்வில் ஒரு பங்காக மாறிவிட்டார். இன்று எனக்கு அவரை கட்டியணைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கொஞ்சம் கூச்சப்படுகிறார். 1000 படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவின் 786 வது படம் என்னுடையது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
 
விழாவில் ரஜினி பேசியபோது : எனக்கு ராஜாவை 70களிலிருந்து தெரியும். அப்போதெல்லாம் அவர் மிகவும் குறும்பாக, நடந்துகொள்வார். நிறைய கிசுகிசுக்கள், பேசிகொண்டே விடிய விடிய மது அருந்துவோம். திடீரென அவரிடம் மாற்றங்கள், அவருடைய நடை , உடை என மாற்றங்கள் உண்டாகின. கலைவாணியே அவரிடம் குடிவந்துவிட்டாள் போல , அன்று முதல் நான் ராஜாவை ராஜா சாமி என்றுதான் அழைக்கிறேன் என கூறினார்.





இளையராஜா இசை குறித்து தனுஷ் பேசும்போது, "நான் ஒரு தேர்ந்த நடிகன் அல்ல. திரையுலகில் நடிக்க வந்ததே ஒரு விபத்துதான். இளையராஜா இசை இல்லாமல் நான் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது. திரையுலகிற்கு வந்து 15 வருடங்கள் ஆகிறது. ஒவ்வொரு நாளும் உங்களுடைய இசையோடுதான் வாழ்கிறேன். ஒவ்வொரு காட்சியுமே உங்களுடைய இசை தான்.

நீண்ட நெடிய இசைப்பயணத்தை கடந்து செல்லும் இசைஞானி இளையராஜாவுக்கு சூரியனின் வாழ்த்துக்களும் சமர்ப்பணமாகட்டும்


575 Views
மும்பை நகரின் அண்மையின் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்ட நடிகை சன்னி லியோன், விழாவில் கலந்துகொண்டு விட்டு லிப்டின் மூலமாக கீழ்தளத்துக்கு விரைந்தார்.

 அவர் சென்ற லிப்டில் இரசிகர்களும் ஏராளமானவர்கள் இருந்தார்கள்.
 திடீரென சென்று கொண்டிருந்த லிப்ட், இடைநடுவில் நின்று போனது.      
 
விழா அமைப்பாளர்கள் பதறினார்கள். சன்னி லியோனை இரசிகர்கள் என்ன செய்யப் போகிறார்களோ என்றும், வெளியே வந்து அவர் என்னென்ன பேச்சுக்களை வீசப்  போகிறாரோ என்றும்!
    மிக வேகமாக தொழில்நுட்பம் சரி செய்யப்பட, சன்னி லியோன் வரும் லிப்ட் வாசலில் பலர் திரண்டுள்ளனர்.
அம்மணிக்கு என்னாயின்று என்ற ஏக்கம் பலரின் மனதிலும்.
ஆனால், நடந்தது வேறாக இருந்தது.

இரசிகர்களின் வாழ்த்துக்கள் பாராட்டுகளோடு லிப்டில் இருந்த அன்பர்களோடு நின்று செல்பி புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டு பாதுகாப்பாக வந்து சேர்ந்தார் சன்னி.

அப்பாடா .... என்று ஆறுதல் பெருமூச்சு அள்ளி வீசியிருக்கிறது விழா அமைப்பாளர்களிடமிருந்து !

#சன்னியை விட்டுடுங்க,நம்ம நயன் நமீதான்னு புடிச்சுக்கொள்ளுங்க...
என்னம்மா நீங்க ?


459 Views
கடந்துபோன சில வருடங்களாக 1980களில் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த பிரபலங்கள் , சந்தித்து நட்புப் பாராட்டி அன்போடு விருந்துண்டு மகிழும் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே!

   ஒவ்வொரு முறையும் நடிகை லிஷிதான் இந்த நிகழ்வை ஆரம்பித்து வைப்பார். கடந்த முறைகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட கலந்து மகிழ்ந்திருந்த செய்திகள் உங்கள் நினைவுகளில் தேங்கிக் கிடக்கும்.

  வருடாவருடம் நடைபெறும் நிகழ்வாக மாறிவிட்ட '' 80களின் நாயக நாயகியர்களின் சந்திப்பு'' நிகழ்ச்சியானது இந்தமுறையும் ஏற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.

இந்தமுறை ரஜினிகாந்த், கமல் ஆகியோரும் கலந்து கொள்வது இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதிலும், கமல் வழமையாக இந்த நிகழ்வில் இதுவரை கலந்து கொள்ளவில்லை. இந்தமுறைதான் முதன் முதலாக கலந்து சிறப்பிக்க உள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

அத்தோடு, குழுவால் அறிவிக்கப்படும் திகதியில் குறிப்பிடப்படும் ஆடையில்தான் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்பது விழாவின் விதி.
   இந்தமுறை இன்னொரு வாய்ப்பும் இளையவர்களுக்கு வாய்த்திருக்கிறது. மூத்த நடிக நடிகையர்களோடு இளையவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

   மோகன், சுதாகர், மம்முட்டி, கார்த்திக், சுரேஷ், விஜய்பாபு, விஜயகுமார், அம்பரீஷ், கன்னட ரவிச்சந்திரன், கதாநாயகிகள் பூர்ணிமா, அம்பிகா, ஸ்ரீப்ரியா, ரேவதி, குஷ்பு, ரம்யாகிருஷ்ணன், ராதிகா, லிசி, சசிகலா, நதியா, மாதவி, ஊர்வசி, சுமலதா, சுவப்னா, சரிதா, மதுபாலா உள்ளிட்ட இன்னும் பல நட்சத்திரங்கள் கலந்து இந்த விருந்து விழாவை சிறப்பிக்கவுள்ளதாக அறியமுடிகிறது.

கொசுறுச் செய்தி :- இந்த சந்திப்பு நிகழ்வில் சிம்பு, நமீதா, பிந்து மாதவி, வேதிகா மற்றும் வைபவ் போன்ற இன்றைய நடிக நடிகைகளின் நடன நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளமை இன்னும் சிறப்பு


#சாப்பாட்டுகென்று ஒரு சந்திப்பா?

ஹூஊஊஊஊஒ
408 Views
இயக்குனர் சங்கரின் வீட்டிற்கு பலத்த பாதுக்காப்பு வழங்கப்பட்டுள்ளது.

காரணம் என்ன என்று, நம்ம கோடம்பாக்கத்து குருவி அலசியபோது, ஐ வெளியாகி வெற்றிகரமாக உலகமெங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது.
அமோக வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும். எதிர்பார்த்த அளவை கடந்து, இப்பொழுது பரவலாக பலராலும் பாராட்டப்படும் படமாக ஐ மாறியிருக்கிறது.
இந்நிலையில், ஐ படத்தின் இயக்குனர் சங்கர் வீட்டிற்கு எதற்க்காக இத்தனை பாதுகாப்பு என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம்.
நமக்கும் எழுந்ததே!
       காரணம் இதுதான், ஐ திரைப்படத்தில் திருநங்கைகளை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகளும் கதை வசனங்களும் இடம்பெறுவதாக குற்றம்சாட்டி திருநங்கைகள் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள காவல்துறை அலுவலகம் முன்பாக ஒன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஐ படத்தில், திருநங்கைகள் இகழ்ச்சிக்கு உரியவர்களாய் சித்தரிக்கப்படுகிறார்கள். ஷங்கர் இப்படி செய்வாரென நாம் எண்ணவில்லை என்கிறார் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட திருநங்கையும் நடிகையுமான ரோஸ்.
அத்தோடு, ஷங்கரின் வீட்டையும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளோம் என அவர்கள் கொடுத்த அறிக்கையின் நிமித்தமாகவே ஷங்கரின் வீட்டுக்கு பலத்த பாதுக்காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குருவி கொத்தி வந்துள்ள தகவல் சொல்கிறது.
#இதுக்கு நாம என்ன சொல்ல?

464 Views
வசூலில் சாதனை படைக்குமா சங்கரின் 'ஐ'திரைப்படம்?

மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொங்கலுக்கு முதல் நாளான கடந்த 14-ம் திகதி வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் படம் ஐ. பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் சீயான் விக்ரம் மற்றும் எமி ஜாக்சன் நடித்து வெளியாகியுள்ளது இந்தப்படம். படம் பார்த்த ரசிகர்கள் அனைவரும் விக்ரமின் நடிப்பிலும், எமியின் அழகிலும் உண்மையிலேயே மெரசலாகியிருப்பார்கள் என்றால் மிகையில்லை.

இந்தநிலையில், படம் பற்றிய எதிர்மறை விமர்சனங்களும் எழாமல் இல்லை. இருந்தாலும் அவை எல்லாம் 'ஐ' படத்தின் வசூலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையாம். கடந்த 14-ம் திகதியிலிருந்து இன்றுவரை திரையரங்கம் நிறைந்த காட்சிகளாகவே (Housefull) ஓடிக்கொண்டிருக்கிறது இந்தப் படம்.

'ஐ' படம் வெளியாகி நான்கு நாட்களில் மட்டும், இந்திய மதிப்பில்  40 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல்மழை பொழிந்திருக்கிறதாம். இதுவரைக்கும் தமிழ்சினிமாவில் வசூல் மன்னனாகத் திகழ்ந்த சூப்பர்ஸ்டார் ரஜினியின் எந்திரன், லிங்கா ஆகிய படங்களும், இளையதளபதி விஜய்யின் கத்தி படமும் கூட ,ஐ, படத்தை போல இவ்வளவு விரைவாக வசூலை அள்ளிக்கொடுக்கவில்லை என திரையரங்க உரிமையாளர்கள் சொல்கிறார்களாம்.  

இந்தப்படம் வெளியானதிலிருந்து ஒரு சில பிரச்சனைகள் இயக்குனர் சங்கரை சங்கடத்திற்கு உள்ளாக்கிக்கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இந்தப்படத்தில் நான்கு வில்லன்களில் ஒருவராக திருநங்கை ஒருவரும் நடித்திருந்தார். அவர் சம்பந்தமான காட்சிகள் திருநங்கைகளை இழிவுபடுத்துவது போன்று இடம்பெற்றிருப்பதாகக்கூறி சங்கருக்கு எதிராக திருநங்கைகள் ஒன்று கூடி சங்கரின் வீட்டிற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் இன்றையதினம் ஈடுபட்டதாகவும், அதன் காரணமாக சங்கரின் வீட்டிற்கு பெரும் காவல்துறைப்பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும்  கோடம்பாக்கத் தகவல் சொல்கின்றன.

எது எப்படியோ, சிக்கலில் சிக்கிக் கொண்டாலும் தமிழ்சினிமாவின் வசூலில் சிறந்த இயக்குனர் என்ற பெயரை சங்கர் தனதாக்கிக்கொண்டிருக்கிறார் என கோடம்பாக்கம் கிசுகிசுக்கிறது. சங்கரின் நிலை இப்படியிருக்க, தயாரிப்புக்கான செலவுகளை வசூல் செய்திருக்கும் இந்த "ஐ" படம், நேற்றையதினத்திலிருந்து வசூலில் வாரிக்குவிக்க ஆரம்பித்திருக்கும் தொகை படத்தின் லாபத்தின் தொகையில் சேரவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன.

*கணேஷமூர்த்தி ராகவன்
426 Views
சிம்புதேவன் இயக்கத்தில் 'புலி' படத்தில் நடித்து வருகின்றார் விஜய்.  படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றது.
 
இப்படத்தில் விஜய் ஜோடியாக சுருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் ஸ்ரீ தேவியும் இப்படத்தில் நடிக்கின்றார்.
 
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை படக் குழுவினருடன் கொண்டாடிய  விஜய் அவர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கியுள்ளார்.
 
சுமார் 260 பணியாளர்களுக்கு தலா ஒரு தங்க நாணயம் என்ற வீதத்தில் விஜய் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
துணை நடிகர், நடிகைகள், வாகனம் ஓட்டுபவர்கள், சமையல்காரர்கள், படப்பிடிப்பு உதவியாளர்கள்,  தயாரிப்பு நிர்வாகிகள்,  உதவி இயக்குனர்கள், மற்றும் படப்பிடிப்புடன்  சம்பந்தப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் தங்க நாணயத்தை பரிசாக வழங்கியுள்ளார் விஜய்.
 
விஜய் தங்க நாணயம் வழங்கியதும் படக்குழுவினர் மகிழ்ச்சியில் விஜய் கையை பிடித்துக் கொண்டு பலர் நன்றி தெரிவித்துள்ளதுடன் அவரை வாழ்த்தியும் உள்ளனர்.
 
விஜயின் தங்க நாணயத்தை பற்றிதான் இப்போதும் முழு கோடம்பாக்கமும் பேசி வருகின்றதாம்.
477 Views
உலகக்கிண்ணம் 2015
இன்னும் 26 நாட்கள் மட்டுமே.
நீங்கள் தயாரா?
 
இதோ எந்தெந்த அணிகளின் எந்தெந்தப் போட்டிகள் எப்போது என்று தெளிவாக அறியத்தரும் 'சூரியன் உலகக்கிண்ணம் 2015 போட்டி அட்டவணை'
 
தரவிறக்குங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
 
 
531 Views

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள ஷங்கரின் 'ஐ' ஆரம்பம் பிரம்மாண்டம். பெரிய வரவேற்பும், வரவேற்புடன் கூடிய விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
ஐ என்ற இந்த பிரமாண்ட படத்தை தயாரித்தவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். 

இது குறித்து அவர் கொடுத்த பேட்டியில் "சீனா, ஜப்பான் தவிர உலகம் முழுவதும் நாளை - புதன்கிழமை படம் வெளியாகிறது. பாகிஸ்தான், உக்ரைனிலும் நாளை படம் திரைக்கு வருகிறது.

மேலும், இந்த படத்தின் 40 சதவீத காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டுள்ளன. அடுத்த மாதம் பிப்ரவரி சீனாவில் புத்தாண்டு கொண்டாடப்படுவதால், அப்போது ‘ஐ’ படத்தை அங்கு திரையிட திட்டமிட்டு இருக்கிறோம். இதேபோல் ஜப்பானிலும் அடுத்த மாதம் வெளியிடப்படும். உலகம் முழுவதும் இந்தப் படம் 1000 கோடிகள் வசூலிக்கும் என எதிர்பார்க்கிறோம்."

இயக்குனர் ஷங்கரும் 'ஐ' பற்றி "உழைப்புக்கு பலனை ரசிகர்கள் அதிகமாகவே கொடுத்திருக்கிறார்கள்" என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

593 Views
கெளதம் மேனனின் இயக்கத்தில் ‘தல’அஜித் நடித்துக் கொண்டிருக்கும் படம் “என்னை அறிந்தால்”. இந்தப்படம் பற்றிய நிறைய செய்திகளை ஏற்கனவே தந்திருந்தோம். இந்த நிலையில் பொங்கலுக்கு வெளியாகும் என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருக்க, எதிர்வரும் 29-ம் திகதிக்கு தள்ளிப்போயிருக்கிறது இதன் திரை வெளியீடு.

பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் விக்ரம் நடிக்க பெரும் பொருட்செலவிலும், சீயானின் கடின உழைப்பிலும் வெளியாகும் படம் தான் "ஐ". பொங்கலை முன்னிட்டு இந்தப்படம் வெளியாவதால், "ஐ" படத்தின் வெற்றியிலும், வசூலிலும் பாதிப்பு ஏற்படாதிருக்கவே ‘தல’அஜித் பெருமனதோடு தான் நடித்த “என்னை அறிந்தால்” படத்தை எதிர்வரும் 29-ம் திகதிக்கு பிற்போட்டிருப்பதாக கோடம்பாக்கத் தகவல்கள் சொல்கின்றன.

இது இவ்வாறிருக்க, “என்னை அறிந்தால்” படத்தின் கிளைமாக்ஸ் பற்றிய, ‘தல’ ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் புதியதொரு செய்தி வெளியாகியிருக்கிறது.

கிளைமாக்ஸ் காட்சி பற்றி எதுவுமே அஜித்திடம் சொல்லாமலேயே ஏனைய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டது. அஜித்தும் அதைப்பற்றி எதுவுமே கேட்காமலேயே ஏனைய அனைத்துக் காட்சிகளிலும் நடித்து கொடுத்திருந்தார் என்பது பற்றி எல்லாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம். இந்தநிலையில் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டு, காட்சி எப்படி அமைக்கப்படுமென அஜித்திடம் விளக்கம் கூறப்பட்டிருக்கிறது. அதைக்கேட்ட அஜித் அதிர்ச்சி அடைந்ததோடு, உடனடியாக மறுப்புத் தெரிவித்திருக்கிறாராம். கிளைமாக்ஸ் பற்றி எதுவுமே சொல்லாமல் படப்பிடிப்பு நடத்திய கெளதம் மேனன், இறுதிக் காட்சியில் ‘தல’அஜித் இறந்து விடுவது போல கதைஉருவாக்கியிருந்தாராம். இந்தக் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்குவதற்காக அஜித்திடம் இயக்குனர் விளக்கிக்கூறும்போதே அஜித் உடனடியாக அதிருப்தி தெரிவித்திருக்கிறார்.

        

இயல்பாகவே தனது கதையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள இயக்குனர் கெளதம் மேனன் விரும்புபவரல்ல. அவரும் தான் வைத்த கிளைமாக்ஸ் காட்சியே படத்துக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால், அதனையே படமாக்கவேண்டுமென விடாப்பிடியாக இருந்துள்ளார். இவ்வாறு முரண்பட்ட நிலையில் இருவரும் இருந்தநிலையில், இயக்குனர்களின் முடிவுகளில் பெரிதும் தலையிடாத நடிகர் என்ற பெருமைபெற்ற ‘தல’அஜித் இந்த அதிருப்திக்கான தெளிவான காரணத்தையும் சொல்லியிருக்கிறார். படத்தில் நான் இறப்பது போல காட்சி வைத்தால் அதனை என் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனாலேயே தான் இந்த கிளைமாக்ஸ் காட்சியை வைப்பதை விரும்பவில்லை என சொல்லியிருக்கிறார்.

அத்தோடு, இந்தப்படம் முழுதும் அஜித்தை மையப்படுத்தியே நகர்வதாலும், ஹீரோவுக்கான கதையாக மட்டும் இது உள்ள நிலையில், அஜித் இறுதியில் இறந்து விடுவது போன்று கிளைமாக்ஸ் வைக்கப்பட்டால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினியின் “தளபதி” படத்திலும் ரஜினி இறுதியில் இறந்து விடுவது போன்றே இயக்குனர் மணிரத்னம் முதலில் கிளைமாக்ஸ் வைத்தார். அதை ரசிகர்கள் ஏற்காததால் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றினார். அதனால் இந்த கிளைமாக்ஸ் சரியாக அமையாது என படக்குழுவினரும் கருத்துக் கூறியிருக்கிரார்களாம்.

இது இப்படியிருக்க, இந்தப்படத்தின் விநியோகஸ்தர்களும் தம் பங்குக்கு, கெளதம் மேனனுக்கு எதிராக கருத்துச் சொல்லியிருந்தார்களாம். தொடர்ந்து பல படங்கள் தோல்வியால் உடைந்துபோயிருந்தவர் இந்தக் கெளதம் மேனன். அவருக்காக கை கொடுத்தவர் 'தல'அஜித். அவருடைய பேச்சையே இப்போது கேட்க மாட்டேன் என்கிறாரே இந்த இயக்குனர் என எதிர்ப்புக் கிளப்பியிருக்கிறார்கள்.

இந்தநிலையில், தான் வைத்த கிளைமாக்ஸ் காட்சிக்கு எந்தப்பக்கம் திரும்பினாலும் எதிர்ப்புக்குமேல் எதிர்ப்பாக இருந்ததனால், இயக்குனர் கெளதம்மேனன் மேலும் தன் பிடிவாதத்தைத் தொடராமல் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றி படமாக்கினார் எனவும் தென்னிந்திய தமிழ் சினிமாத்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

எதையும் மாற்றுங்கள்……… படம் பார்க்கவரும் எங்களை மட்டும் ஏமாற்றாதீர்கள் - கெளதம்மேனனிடம் ரசிகர்கள்.

*கணேசமூர்த்தி ராகவன்.
612 Views

நானும் ரௌடிதான்......ஆனந்தராஜ் உட்கார்ந்த படியே ரௌடித்தனம்.

சில ஆண்டுகளாக நம்ம ஆனந்தராஜை கண்டு கொள்ள முடியவில்லை இப்போது மீண்டும் திரும்பி இருக்கிறார்.அண்மை காலமாக பிரபு தேவா இவரை ஆக்‌ஷன் ஜாக்சன் திறப்படத்தின் மூலமாக இந்திக்கு கொண்டு சென்றார்.

இப்போது மீண்டும் விஜய் சேதுபதி நயன்தார நடிக்கும் நானும் ரௌடி தான் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். ஆனால் முன்னர் அடிதடியாக சண்டை செய்த இவர்,இந்த படத்தில் இருந்த படியே  கதாநாயகனோடு மோதுகிறாராம்.

முன்னர் விஜகாந்த்,சத்தியராஜ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நேருக்கு நேர் சண்டை போட்ட இவர் உட்கார்ந்த படி தனது வில்லத்தனத்தை வெளிப்படுத்த்துகிறார். இந்த படத்தில் ஆனந்தராஜின் உருட்டல் மிரட்டல் நடிப்பு மேலும் சூப்பரோ சூப்பர்.
400 Views
புதிய விளம்பரம் ஒன்றில் பாப் ஹேர் ஸ்டைலில் கலக்கலாக வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராய்.தன்னுடைய அழகிய கூந்தலை வெட்டி விளம்பரத்தில் நடித்திருக்கிறார்.பல கோடி சம்பளமும் வாங்கி இருக்கிறார்.

இது கூந்தல் பராமரிப்பு,அழகு சாதன, நிறுவனம் ஒன்றுக்காக நடித்துள்ளார். இதற்கு முதலும் இந்த நிறுவனத்துக்காக நடித்த்துள்ளார்.தனது கணவர் மற்றும் மாமனார் மாமியார் எல்லோரிடமும் கேட்டு தான் தனது அழகிய கூந்தலை கத்தரித்துள்ளாராம்.
நாங்க முடி வெட்ட காசு கொடுக்கணும்...ஆனால் ஐசுவின் முடிக்கு கோடி கொடுத்து முடி வெட்டிய நிறுவனம்.

இது தான் உலக அழகியின் மகிமை.
691 Views

ஐ, என்னை அறிந்தால் , என தமிழ் திரையுலகம் பரபரப்பாக இருந்தாலும் அனைவரது கவனமும் தற்போது திரிஷா மீதே உள்ளது.

ஆம் , இன்னும் சில மாதங்களில் திருமண பந்தத்தில் இணையவுள்ளார் திரிஷா.

தமிழ்த் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து அதனை நீண்ட காலமாக தக்கவைத்துக் கொண்டுள்ளார் அவர்.

எனினும் வயது போக போக வாய்ப்புகளும் குறைந்து கொண்டே போக இறுதியாக திருமணம் முடிக்க இணங்கினார் திரிஷா. வழக்கமான கோலிவுட் நடிகைகளைப் போல தொழில் அதிபர் ஒருவரையே திரிஷாவும் கைபிடிக்க உள்ளார் .

‘வாயை மூடி பேசவும்’, ‘காவியத்தலைவன்’ போன்ற படங்களை தயாரித்த வருண் மணியனை மணக்கவுள்ளார் திரிஷா.

இவர்களது நிச்சயதார்த்த நிகழ்வு எதிர்வரும் 23- ஆம் திகதி சென்னையில் நடக்கவுள்ளது. இதனை டுவிட்டர் வாயிலாக உறுதி செய்துள்ளார் திரிஷா.

இந்நிலையில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே நிச்சயதார்த்ததுக்கு அழைக்கப்பட உள்ளனர். 25-ஆம் திகதி நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினருக்கு திரிஷாவும் வருண்மணியனும் இணைந்து விசேட விருந்து அளிக்கின்றனர்.

இவர்களது திருமணம் மார்ச் மாதம் நடைபெறலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

புதுமை விரும்பியான திரிஷா பறக்கும் விமானத்தில் திருமணத்தை நடத்த யோசித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் இதுவரை உறுதி செய்யப்படாத போதிலும் இதற்கு வாய்ப்பிருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

எனவே பொருத்திருந்து தான் பார்க்கவேண்டும் திரிஷா வானத்தில் வைத்து மாங்கல்யம் வாங்கிக்கொள்வாரா என...

498 Views
[1]      «      1847   |   1848   |   1849      »      [1878]




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top