தேசிய விருது சிறந்த நடிகை போட்டிக்கு பிரியங்கா சோப்ரா நடித்த ‘மேரி கோம்’, கங்கனா ரனாவத் நடித்த ‘குயின்’ ஆகிய திரைப்படங்கள் சென்றன. இதில் குயின் படத்துக்காக கங்கனா தேசிய விருது வென்றார். சமீபத்தில் அதற்கான விருது பெற்று மும்பை திரும்பிய கங்கனா மகிழ்ச்சியை கொண்டாட தன் வீட்டு மாடியில் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தார்.
ஆமிர்கான், இம்ரான் கான், ஷ்ரத்தா கபூர், அனுபம் கெர், பரா கான், சோனு சூட், வித்யாபாலன் உள்பட பலர் பங்கேற்றனர். யாரும் எதிர்பார்க்காத வகையில் தேசிய விருது போட்டியில் விருதை இழந்த பிரியங்கா சோப்ராவும் பார்ட்டியில் பங்கேற்றதுடன் கங்கனாவுக்கு முத்தம் கொடுத்து கட்டித் தழுவி வாழ்த்து கூறினார். பின்னர் ஸ்டைலாக நடனமும் ஆடி அசத்தினார். அவரது பெருந் தன்மையை வந்திருந்த விருந்தினர்கள் பாராட்டினார்கள். ஆமிர்கான் உள்ளிட்ட சிலர் வாழ்த்தி பேசிய பிறகு பார்ட்டி தொடங்கியது.
ஆட்டம், பாட்டு மது பானத்துடன் பார்ட்டி களைகட்டியது. மகிழ்ச்சியில் அதிகமாக குடித்துவிட்டு கங்கனா நடனம் ஆடியதால் பார்ட்டியில் சலசலப்பும் ஏற்பட்டது. அதி உச்ச போதையில், தள்ளாடியபடி கங்கனா நடனம் ஆடியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், அதனையும் இரசித்து மகிழ்ந்து ஆடினார்கள் நட்சத்திரங்கள்.
-கோடம்பாக்கக் குருவி-