முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக 2ஆயிரம் மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி மானநஷ்ட வழக்கு ஒன்றை தாக்கல் செய்ய உள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
நிதியமமைச்சர், லங்காபுர அபிவிருத்தி வங்கியின் ஊடாக சட்டவிரோதமாக கடன் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, அண்மையில் தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்ஸவின் இந்த கருத்து தொடர்பிலேயே தான் மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாகவும் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகின்றேன். எதையும் பேசுவதானால் ஆதாரத்தையும் முன்வைக்க முயலுங்கள். உங்கள் காலத்து ஆட்சியை போன்று செயற்பட வேண்டாம். அது போல் 2000 மில்லியன் ரூபா மான நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்ய எமது சட்டத்தரணிக்கு பணித்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்தார்.