தலைப்பைப் பார்த்ததும் ஒரே குழப்பமா இருக்கா? அதாவது, வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள மாஸ் திரைப்படம் வரும் 29ஆம் தேதி உலகம் முழுவதும் வெகு பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்த படத்தில் சூர்யாவுடன் நயன்தாரா, ப்ரணிதா, பிரேம்ஜி அமரன், பார்த்திபம், சமுத்திரக்கனி, மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் ரிலீஸான இந்த படத்தின் பாடல்கள் தற்போது சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
இந்நிலையில் சூர்யா, பிரபல சமூக இணையதளம் ஒன்றில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். சூர்யா ரீமேக் செய்ய விரும்பும் திரைப்படம் எது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், 'கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாக கூறினார்.
பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் திரைக்கதையில் கமல்ஹாசன், அம்பிகா, சத்யராஜ் உள்பட பலர் நடித்த திரைப்படமான 'விக்ரம்' 1986ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசனின் ரசிகரான சூர்யா, விரைவில் "விக்ரம்" படத்தை ரீமேக் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-கோடம்பாக்கக் குருவி-