2,224 Views
கராச்சியில் பயணிகள் பஸ் ஒன்றை மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட தீவிரவாதிகள் வழிமறித்துள்ளனர்.
முதலில் பஸ் சாரதியை சுட்டுக் கொன்ற அவர்கள், பஸ்சில் இருந்தவர்கள் மீது சரமாரியாக சுடத் தொடங்கியுள்ளனர். இதில் 25 ஆண்கள், 16 பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 47 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
பஸ்சில் மொத்தம் 60 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.பலியானவர்களில் பெரும்பாலானவர்களின் தலையில் சுடப்பட்டுள்ளதாக கவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானின் தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பல நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

