தனது மனைவிக்கு போதை மருந்து கலந்த உணவைக் கொடுத்து, அவரை கொலை செய்த கொலை செய்ததாக, குறித்த பெண்ணின் கணவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கனடாவில் கிறிஸ்தவ மத போதகராக செயல்பட்டு வந்த பிலிப் கிராண்டின் என்பவர், கடந்த 2011 ஆம் ஆண்டு, தமது மனைவி அன்னா கரிசாவை, கொலை செய்து விட்டு, அவர் குளியலறையில் மரணமடைந்து கிடப்பதாக பொய்யான தகவலைக் கூறி காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார்.
தகவல் அறிந்து விரைந்து சென்ற பொலிசார் மற்றும் மருத்துவ உதவிக் குழுவினர் கர்ப்பிணியின் சடலத்தை மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணைகளை முன்னெடுத்த போது, குறித்த பெண்ணின் கணவரே குற்றவாளி என்பது கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.