மயிலு மயிலு என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட, மறைந்த நடிகை ஸ்ரீதேவி நடித்த, mom திரைப்படம், சீனாவில் மார்ச் மாதம் 22ஆம் திகதி திரையிடப்படவுள்ளது.
அவர் இறுதியாக நடித்த திரைப்படம் என்பதோடு, தேசிய விருதை அவருக்கு பெற்றுக் கொடுத்த திரைப்படமும் கூட.
திரைத்துறையில், அதுவும், அவரது 50வது ஆண்டில், தைரியமான மற்றும் நல்ல கதையை, சரியான முறையில், அழகாக தெரிவு செய்து நடித்தமைக்காக, எக்கச்சக்கமான பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டார்.
போலந்து, செக் குடியரசு, ரஷ்யா, அரபு நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட, 39 நாடுகளில் வெளியிடப்பட்ட இந்தத் திரைப்படமானது,இப்போது சீனாவிலும் ,வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்.
சிறந்த பின்னணி இசைக்காக, நம் ஒஸ்கார் நாயகன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் , தேசிய விருதை பெற்றுக் கொடுத்த திரைப்படம்.
இது குறித்து தயாரிப்பாளர், போனி கபூர் கூறும்போது, "mom படம் வெளியான அனைத்து நாடுகளிலும், தாய்மார்களுக்கும், பார்வையாளர்களுக்கும் ,படத்துடன் ஒரு நல்ல பிணைப்பை ஏற்படுத்தியது. அத்துடன் , ஸ்ரீதேவியின் இறுதித் திரைப்படம் என்பதால், இந்த அழகிய கதையை, முடிந்தவரை மக்களுக்குள் கொண்டு செல்லவேண்டும் என ஆசைப்பட்டேன்.அதுவும் ஏற்கனவே வெற்றிதான் .அந்தவகையில் இப்போது மிகப் பெரிய நாட்டுக்கு, இந்தத் திரைப்படம் செல்வதும் மகிழ்ச்சி பெருமை " எனக் கூறியுள்ளார்.
75வது கோல்டன் குளோப் விருதுக்கு, வெளிநாட்டுத் திரைப்பட பிரிவில் தகுதி பெறவும் , இந்தத் திரைப்படம் திரையிடப்பட்டமையும், குறிப்பிடத்தக்கது.