சூரியனின் 16வது பிறந்ததின கோலாகல கொண்டாட்டங்கள் இன்று காலை சூரியனின் அலுவலகத்தில் ஆரம்பித்தது. சமய வழிபாடுகளோடு தொடங்கிய நிகழ்வில், ஆசிய ஊடக வலையமைப்பின் தலைவர் திரு.ரெய்னோர் சில்வா தலைமை தாங்கி நிகழ்வுகளை அலங்கரித்தார்.
அவரோடு அரவிந்த லொக்குகே, தம்மிக பண்டார தென்னக்கோன், சூரியனின் பணிப்பாளர் ஏ.ஆர்.வி.லோஷன் மற்றும் ஏனைய உயரதிகாரிகளும் மாத்திரமில்லாமல், சூரியனின் பிரம்மாண்டமான பிறந்தநாள் பரிசு மெகா ப்ளாஷ்டில் கலந்துகொள்ள வந்திருக்கும் தென்னிந்திய பின்னணி பாடகர்களான எம்.கே.பாலாஜி, சர்மிளா, பிரபு ஆகியோரும் சூரியக் குடும்பத்தினரோடு கலந்து சிறப்பித்தார்கள்.
மதியப் பொழுதில் சூரியனோடு இணைந்திருக்கும் நேய சொந்தங்களுக்காக, உள்ளக கலையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சரிகம கருணாவின் இசைநிகழ்ச்சி காற்றலையில் நேரலையாக கலந்து இன்னும் பிரமிப்பை அதிகமாக்கியது.
அலங்கரிக்கப்பட்ட அலுவலகம், அன்போடு நிறைந்த நேயர் கூட்டம், மகிழ்ச்சித் திளைப்பின் உச்சியில் முதல்தர வானொலி சூரியன் தனது 16வது அகவை நிறைவை இன்று அலுவலகத்தில் கொண்டாடியது ஒரு சிறப்பெனில், இன்னொரு அசத்தலான சிறப்பு நாளையும் நிகழவுள்ளது.
நம் பாரம்பரியம் பேசும் யாழ் மண்ணில்
மெகா ப்ளாஸ்ட் எனும் நாமத்தோடு - அதிரடி இசை பிரவாகம்