நாம் நாளாந்தம் கொள்ளை அடிப்பு தொடர்பான செய்திகளை அதிகம் படிக்க தவறவே மாட்டோம். அந்தளவிற்கு கொள்ளைக்காரர்கள் மலிந்துவிட்டார். சிலர் கொள்ளை அடிப்பதுடன் கொலையும் செய்வது மிகவும் பயங்கரமானதே.
இது இப்படி இருக்க, சீனாவில் திருடன் ஒருவன் மிகவும் விசித்திரமான முறையில் நடந்துகொண்டுள்ளார். சீனாவின் ஹூயிங் நகரில் உள்ள ATMமில் இருந்து பெண் ஒருவர் பணம் எடுப்பதற்காக கார்டைப் போட்டு பின் எண்ணை அழுத்தியுள்ளார்.
அந்த சமயத்தில் திருடன் ஒருவன் சற்றும் எதிர்பாராத விதமாக பணம் எடுக்க வந்தவர் போன்று பெண்ணின் பின்னே வந்து நின்றுள்ளான். உடனே தன்னிடம் இருந்த கத்தியை காட்டி திருடன் மிரட்டவும் அந்த பெண் தான் பெற்ற பணத்தை பயத்தில் குறித்த திருடனிடமே கொடுத்துள்ளார்.
பெண்ணிடம் பணத்தை பெற்ற திருடன், ஏடிஎம் இயந்திரத்தில் அப்பெண்ணின் மிகுதி பணம் எவ்வளவு என்று அவதானித்துள்ளான். அதில் வேறு எந்த பணமும் இல்லை. அதை பார்த்த திருடன் தான் பெண்ணிடம் மிரட்டி பெற்றுக்கொண்ட பணத்தை மீண்டும் பெண்ணிடம் கொடுத்து சிரித்துவிட்டு அவ்விடத்தை விட்டு சென்றுள்ளான்.
இந்த காட்சி ATM மையத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் குறித்த திருடனை பாராட்டி கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார்கள். ஆனால் திருட்டில் ஈடுபட்ட குற்றத்திற்காக அப்பிராந்திய காவல்துறையினர் திருடனை கைது செய்துள்ளனர்.