திருமணம் என்றாலே தாலி காட்டும் சடங்கே மிகவும் முக்கிய அம்சமாக இருந்து வருகின்றது. பொதுவாக தாலியை மணமகன் தன் வருங்காலத்துணைக்கு கட்டுவதே காலம் காலமாக நடைபெற்று வரும் நம் சம்பிரதாயம். ஆனால் இதற்கு முற்றிலும் மாறுபட்டதாக ஒரு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த திருமண நிகழ்வின் சுவாரஸ்யம் என்னவென்றால், மணமகனுக்கு மணமகளே தாலி கட்டியமைதான். வாங்க என்ன நடந்திச்சு? எங்கு நடந்திச்சு என்று பாக்கலாம்
கர்நாடகாவின் விஜய்புரா மாவட்டத்தில் உள்ள நலத்வாட் நகரத்தில்தான், மணமகனுக்கு மணமகள் தாலி காட்டும் விசித்திர திருமணம் நடைபெற்றுள்ளது. அங்கு திருமணம் செய்யும் மணப்பெண்கள், இதுவரை ஆண்களால் தாலி கட்டும் நடைமுறையை மாற்றி, தாமே தாலி எடுத்து தம் எதிர்காலக் கணவருக்கு கட்டி இருக்கின்றார்கள்.
IT பொறியிலாளர்களான லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த மணமகன் அமித், குருபா சமுதாயத்தைச் சேர்ந்தவர் பிரியா இருவரும் திருமண பந்தத்தில் இணைய முடிவெடுத்தனர். இந்த திருமணத்தில் சில வித்தியாச நிகழ்வுகள் நடந்தேறின. 12ம் நூற்றாண்டின் லிங்காயத் சமூக அடையாளமான பசவண்ணாவின் சிலையில் முன்னாலே இந்தத் திருமணம் நடைபெற்றது. அதில் மங்கள வாத்தியங்கள் முழங்க பிரியா, அமித்தின் கழுத்தியில் தாலி கட்டினார். இதேபோன்று மற்றுமொரு திருமணம் நடந்துள்ளது.
பிரபுராஜ் மற்றும் அங்கிதா ஆகிய இருவரும் இருவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களும் ஆண்டாண்டுகாலமாக நடைமுறையில் இருக்கும் பழக்கத்தை உடைத்து, திருமண பந்தத்தில் இணைத்துள்ளார்கள். அங்கிதா என்ற குறித்த மணமகள், பிரபுராஜின் கழுத்தில் தாலியை அணிவித்தார்.
இந்த இரண்டு திருமணங்களிலும் ஏராளமான உறவினர்களும் தோழர்களும் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துளார்கள். இந்த திருமணங்களை முன்னோடியாக கொண்டு எதிர்வரும் காலங்களில் திருமணம் செய்யும் மணமக்கள் இந்த நடைமுறையை பின்பற்றுவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.