Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
22
சூடாக தேநீர் பருகுவதால் புற்றுநோய் ஏற்பட 90 % வாய்ப்புண்டு

SooriyanFM Gossip - சூடாக தேநீர் பருகுவதால் புற்றுநோய் ஏற்பட 90 % வாய்ப்புண்டுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,619 Views
ஒருநாளின் ஆரம்பமே நம்மில் பலருக்கு தேநீரோடுதான் ஆரம்பிக்கிறது. தேநீர் அருந்தினால்தான் அடுத்த வேலையை ஆரம்பிக்க முடியும் என்ற அளவுக்கு தேநீரில் மோகம் கொண்டிருக்கிறோம்.
சூடாக தேநீர் அருந்துவதால் உணவுக்குழல் புற்றுநோய் அல்லது குடல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்துகள் அதிகம் இருப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. வெயில் காலமோ அல்லது குளிர் காலமோ பெரும்பாலானவர்கள் சூடாக தேநீர் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர். சூடு இல்லாமல் தேநீர், கோபி குடிப்பவர்களின் எண்ணிக்கையோ மிக குறைவு என தகவல் வெளியாகியுள்ளது. 

மிகவும் சூடாக தேநீர் அருந்தினால் உணவுக்குழாயை புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதாக அமெரிக்க புற்றுநோய் சங்கம் மேற்கொண்ட ஆய்வில் உறுதியாகியுள்ளது. அதாவது 60 டிகிரி செல்சியசிற்கு மேல் சூடாக தேநீர் அருந்துவதால் இந்த பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என்று மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோல நாள் ஒன்றுக்கு 700 மி.லீ தேநீரை சூடாக அருந்துவதாலும் 90 சதவிகித அளவிற்கு புற்றுநோய் தாக்கும் என கூறப்படுகிறது.

நமது வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாய் மிகவும் மிருதுவானது. அதிகமான சூட்டுடன் தேனீரோ, கோபியோ அருந்துவதால் உணவுக்குழாயின் சுவர் பாதிக்கப்பட்டு திசுக்கள் பலவீனமடைகின்றன. இதனால் புற்றுநோய் கட்டி ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

அமெரிக்க புற்றுநோய் சங்கம் கடந்த 13 ஆண்டுகளாக 40 முதல் 75 வயதுக்குட்பட்ட சுமார் 50000 ற்கு மேற்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில், சூடாக தேநீர் அருந்துவதால் 317 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

புகையிலையால் மட்டும் ஒருவருக்கு புற்றுநோய் வருவதில்லை, புத்துணர்வுக்காக அருந்தும் தேநீராலும் கூட புற்றுநோய் ஏற்படும் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அதிக சூடு இல்லாத தேநீர் அருந்தினால் இத்தகைய பாதிப்பில் இருந்து விடுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top