இந்தியா விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கோவிலில் வேலாயுதத்தில் குத்தி வைக்கப்பட்டிருந்த 9 எலுமிச்சம் பழங்களை பக்தர்கள் ரூ. 1.50 லட்சத்திற்கு ஏலம் எடுத்துச் சென்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒட்டனந்தல் என்ற கிராமத்தில் உள்ள ரத்தினவேல் முருகன் ஆலயத்தின் கருவறையில் கடந்த 11 நாட்களாக வேலாயுதத்தில் குத்தி வைக்கப்பட்டிருந்த 9 எலுமிச்சை பழங்கள் நேற்றிரவு ஏலம் விடப்பட்டன.
முருகன் கோவில் கருவறையில் குத்தி வைக்கப்பட்டிருந்த எலுமிச்சை என்பதால் தீராத நோய்களுக்கு தீர்வு கிடைக்கும் குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்தப் பழச்சாறு அருந்தினால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கையாலும் எலுமிச்சைப்பழங்களை எத்தனை லட்சங்கள் கொடுத்தாவது வாங்கிச்செல்ல கடும் போட்டி ஏற்படுவதாக அந்த ஊர் மக்கள் கூறுகிறார்கள்.
மொத்தம் 9 எலுமிச்சை பலன்களும் ரூ.1,55,000 க்கு ஏலம் போயுள்ளன.