சம்பவத்துடன்தொடர்புடைய மூன்று சந்தேகத்துக்குரியவர்கள் முதலில் கைது செய்யப்பட்டதுடன்ஏனைய ஐந்து பேர் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்தவர்களை காவற்துறை நிலையத்திற்கு அழைத்து செல்ல முற்பட்ட போது கொந்தளித்த பிரதேச மக்கள் அவர்கள் மீது தாக்க முற்பட்டனர்.
இதன்போது, இரண்டு காவற்துறையினருக்கு சிறியளவிலான காயம் ஏற்பட்டது.
இதன்பின்னர், கடற்படையினருக்கு சொந்தமான படகு மூலம் அவர்கள் யாழ்ப்பாணம் காவற்துறைநிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன்குணசேகர தெரிவித்துள்ளார்
இதேவேளை, வெள்ளவத்த பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்ட 9வது சந்தேகத்துக்குரியவர் வெளிநாடு செல்ல தயாரானதாக குற்றம்சுமத்தி சந்தேகத்துக்குரியவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியை நேற்று பொது மக்கள் முற்றுகையிட்டதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து, புங்குடுதீவில் அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டது.
வெள்ளவத்தையில் கைது செய்தவரை அழைத்து வரும் வரையில் இந்த முற்றுகை போராட்டம் தொடரும் என பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எமதுசெய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவுமாணவி படுகொலை தொடர்பாக நேற்று வடக்கிலும், கிழக்கிலும் மாணவர்கள் மற்றும்பொதுமக்களின் பங்களிப்புடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் பாடசாலைகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழ்ப்பாணத்தில்நேற்று பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதுடன், பல்வேறுப்பட்ட அமைப்புகள்போராட்டங்களை மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்தநிலையில்.திருகோணமலை, கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களின் பல பிரதேசங்களிலும்புங்குடுதீவு மாணவி படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் முன்எடுக்கப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.