பிரபல நடிகை ராய்லட்சுமி வித்தியாசமான அதே நேரத்தில் தைரியமான குணம் கொண்ட நடிகை என கோலிவுட்டில் அனைவரும் கூறுவதுண்டு. அதற்கேற்றாற்போல் அவர் அடிக்கடி பல சாகசங்களை செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவதுண்டு. சமீபத்தில் கூட துபாய் சென்றபோது மிக உயரமான ஒரு பகுதியில் இருந்து பாராசூட்டில் குதித்தார் என்ற செய்தி வெளிவந்தது.
இந்நிலையில் ராய்லட்சுமி கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழிக்க தாய்லாந்து சென்றார். அங்குள்ள புகழ்பெற்ற புலிகள் சரணாலயத்திற்கு சென்ற ராய்லட்சுமி, உயிருள்ள புலிக்கு பால் கொடுக்க வேண்டும் என்ற தனது ஆசையை சரணாலய நிர்வாகிகளிடம் தெரிவித்தாராம்.
ராய்லட்சுமியின் ஆசையை பூர்த்தி செய்ய சரணாலய ஊழியர்கள் பாதுகாப்புடன் அவரை புலியின் அருகே அழைத்து சென்றனர். அங்கிருந்து ஒரு நிஜப்புலியை மடியில் வைத்து அதற்கு புட்டிப்பால் கொடுத்தாராம். இதுகுறித்த புகைப்படம் ஒன்று அவருடைய சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது.
எனது வாழ்க்கையில் உள்ள பல ஆசைகளில் ஒன்று புலிக்கு பால் கொடுக்க வேண்டும் என்பது. அந்த ஆசை தற்போது நிறைவேறியதாகவும், புலிக்கு பால் கொடுத்த அந்த நிமிடங்களை என் வாழ்நாளில் மறக்க வே முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ராய்லட்சுமி தற்போது அரண்மனை 2, ஒரு டிக்கெட்டுல ரெண்டு படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.