தமிழ்த்திரையுலகில் நண்பன் திரைப்படத்தின் மூலம், பல இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் விருப்பைப் பெற்றவர் இலியானா. எனினும் தமிழ் திரையுலகில் இவருக்கான வாய்ப்புக்கள் பரந்தளவில் கிடைக்கவில்லை. ஆனால் இலியானாவுக்கு இந்தியில் சிறந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள பல சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்கள், திரையுலக பிரபலங்களை பற்றி அறிந்து கொள்வதில் அதிக ஆர்வத்தைக் காட்டுகின்றனர்.
இது குறித்து நடிகை இலியானா மகிழ்வுடன் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். '' திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, பிரீத்தி ஜிந்தா ஆகியோரை விட, என்னைத் தான் சமூக வலைத்தளங்களில் உள்ள பல ரசிகர்கள் அதிகமாக தேடி உள்ளனர். சில மாதங்கள் படங்களில் நடிக்காமல் இருந்த போதும், ரசிகர்கள் என்னை மறக்காமல் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது ரசிகர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன் '' என, நடிகை இலியானா குறிப்பிட்டுள்ளார்.