உலகளாவிய ரீதியில் இன்று சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது. தொழிலாளர்களின் உரிமைகள் மாபெரும் எழுச்சிப் போராட்டத்தின் பின்னர், வெற்றிகொள்ளப்பட்டமையை நினைவுகூரும் முகமாக மே மாதம் முதலாம் திகதி, சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்படுகின்றது.
18 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் 12 தொடக்கம் 18 மணிநேர கட்டாய வேலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட தொழிலாளர்களின் புரட்சி, மே தினத்தின் உருவாக்கத்திற்கு வித்திட்டது.
இந்த போராட்டம் இங்கிலாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ரஷ்யா, முதலான நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.
மிக நீண்ட போராட்டத்தின் பின்னர், ஒருவாறாக 1890 ஆம் ஆண்டு, மே மாதம் முதலாம் திகதி, அனைத்துலக அளவில், தொழிலாளர்கள் இணைந்து, மாபெரும் போராட்டத்தை நடத்தி வெற்றியும் பெற்றனர்.
இந்த வெற்றிமிக்க நாள், பின்னர் சர்வதேச தொழிலாளர் தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த நாளில், இலங்கையின் பல இடங்களிலும் தொழிலாளர் தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்ப்பிடத்தக்கது.