தாய்லாந்து மன்னர் வஜிரா லோங்கார்ன் நான்காவது முறையாக திருமணம் செய்துள்ளார். 66 வயதான அவர், சுஜிதா திட்ஜாய் என்ற பெண் அதிகாரியை திருமணம் செய்துள்ளார்.
தாய்லாந்து நாட்டின் 10வது ராமா என்ற அழைக்கப்படும் வஜிரா லோங்கார்ன், கடந்த 2016 ஆம் ஆண்டில் தனது தந்தையின் மறைவுக்கு பின் புதிய மன்னராக பொறுப்பேற்றார்.
இந்தநிலையில் எதிர்வரும் 4 ஆம் திகதி வஜிரா லோங்கார்ன் அதிகாரப்பூர்வமாக பட்டம் சூட்டும் விழா நடைபெற உள்ள நிலையில், அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் அவர் உடனடியாக தாய்லாந்து நாட்டின் அரசியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே முன்னாள் தாய் ஏர்வேஸ் நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றிய சுஜிதா திட்ஜாய், பின்னர் மன்னரின் பாதுகாப்பு பிரிவில் அதிகாரியாக பணியாற்றிய போது மன்னருக்கும் சுஜிதா திட்ஜாய்க்கும் காதல் ஏற்பட்டதாகவும், அதன் விளைவாக இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளதாகவும் அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மன்னர் வஜிரா லோங்கார்ன் முன்னர் 3 முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அவருக்கு 7 பிள்ளைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது