நடிகை த்ரிஷா எத்தனை நடிகைகள் வந்தாலும் இன்னும் பல இளைஞர்களின் கனவு கன்னியாகத் தான் இருக்கின்றார். 96 படம் அவருக்கு பெரிதும் கை கொடுத்தது. பல விருதுகளும் அவருக்கு இப்படத்தால் கிடைத்திருக்கிறது.
அத்துடன் நடிகை த்ரிஷா பேட்ட படத்திற்கு பிறகு தற்போது ராங்கி படத்தில் நடித்து வருகிறார். முருகதாஸ் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பின் போது த்ரிஷாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் பல தகவல்கள் அவரின் உடல் நிலை பற்றி பரவி வருகின்றன. இந்நிலையில் தற்போது த்ரிஷா பரிபூரணமாக குணமாகிவிட்டார், தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரின் தாய் உமா கூறியுள்ளார்.